பக்கம்:ஒரு மாணவன் மகாத்மாவாகிறான்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32


எலக்ஷனில், தன்ளுேடு போட்டி போடும் பாபு ஜெயிக்கக் கூடாதுன்னு மூர்த்தி எவ்வளவு டிரை' பண்ணி ஞன். எத்தனை குறுக்கு வழிகளில் எல்லாம் முயற்சி செய் தான். அத்தனையும் முடியாமல் தோற்றுப் போனன். அந்தக் கோபம் இன்னும் அவனுக்கு அடங்கல்லே.”

அதுக்காக இப்படி யெல்லாமா செய்யறது. கணபதி?”

பின்னே என்ன செய்யறது? இதுக்கு முன்னே அவன் லிடரா இருந்தப்போ பழைய வார்டனைக் கைக்குள் போட் டுக்கொண்டு, திறையச் செலவுக்கு கமிஷன் அடிச்சான் மூர்த்தி. இப்போ அவரும் இல்லே; அந்தப் போஸ்ட்டும் அவனுக்குக் கிடைக்கல்லே. பாபு மேலே ஆத்திரப் படருன்.”

இதிலே ஆத்திரப்பட என்ன இருக்கிறது. கணபதி. தேர்தல்லே, வெற்றியும், தோல்வியும் சகஜம். தோற்றுப் போய் விட்டதுக்காக மனம் போனபடி எதுவேனும்னலும் செய்யறதா?”

இதையேதான் சேகர் நானும், மூர்த்தியோட முக த் துக்கு நேரேயே தென்னந் தோப்பிலே கேட்டேன். உடனே அவங்களுக்குப் பிரமாதக் கோபம் வந்து விட்டது. நான் ஒரு கட்சியிலேயும் இல்லேன்னு. வெளவால் மாதிரி நீ இங்கேயும் அங்கேயும் பழகறதை நாங்கள் வெறுக்கிருேம். என்ன, என் லட்சியத்தை என் கொள்கைகளைப் பிடி க்தி ந்தால், என்ளுேடு மட்டும் இரு; இல்லாவிட்டால், பாபு வின் பக்கமே போய்விடு' என்று குட்பை கூறிவிட்டான் நானும், சரி என்று திரும்பிப் பார்க்காமலே வந்து விட் டேன் என்ருன் கணபதி.

"ஆமாம், இந்த மூர்த்திக்கு, ஒரு லட்சியம், கொள் கைன்னு வேறே இருக்காக்கும்? சரியான சுயநலக்காரன் தன் எண்ணப்படி எதைச் செய்யவும் தயங்கமாட்டான்.