பக்கம்:ஒரு மாணவன் மகாத்மாவாகிறான்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36


நம்புங்கள். நாம் பல வீனர்கள் என்று ஒரு போதும் நினைக் காதீர்கள்-என்று கூறிய விவேகானந்தரின் வாக்கை நான் முழுமையாக நம்புகிறேன் என்ருன் பாபு.

அதற்கு சேகர், 'உன் முயற்சியும், அன்பும், நம்பிக்கை யும் வென்ருல் எங்களுக்கும் மகிழ்ச்சிதான் பாபு ஆல்ை மூர்த்தி உனக்குப் படுகுழி அல்லவா தோண்டி வைத்திருக் கிருன். அதிலிருந்து நீ மீண்டல்லவா அவனைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்,' என்ருன்.

பிறருக்குக் குழிபறிக்கிறவர்கள் எல்லாம் தாங்கள் தோண்டிய குழியில் தாங்களே விழுவதுதான் வழக்கம். அப்படி விழுந்தவன தாக்கிவிட எதிரிக்கு மனமிருந்தால் போதும், பிறகு குழிபறிப்பவனே இருக்க மாட்டான் என்பது என் நம்பிக்கை என்ன சொல்கிறீர்கள்?’’

எங்களைக் கேட்டால், உன் நம்பிக்கைக்கு எங்கள் அனு: தாபங்களைத்தான் சொல்லுவோம் பாபு. பொல்லாத மூர்த்தி யையும் நினைத்து, அவன் உன்மேல் சுமற்றியிருக்கிறதிருட்டுக் குற்றத்தையும் நினைத்து, பிரின்சிபால் நடத்தப் போகிற

புதன்கிழமை விசாரணையின் கடுமையையும் நினைத்தால் எனக்கு வயிற்றைக் கலக்குகிறது,' என்ருன் கணபதி.

சேகரும் அதற்கு, "உனக்கு மட்டும்தான கலக்குகிறது. கணபதி? அந்த அயோக்கியராஸ்கல் மூர்த்திக்கு எவ்வளவு தைரிய மிருந்தால் இப்படித் துணிந்து ஒரு திருட்டுப்பழியை பாபு எது சுமற்றியிருப்பான்? அவனைச்சொல்லிக் குற்றமில்லை கணபதி, அவனுக்கு இன்னும் அனுதாபம் காட்டுகிற பாபு மேல்தான் எனக்கு ஆத்திரம் பற்றிக்கொண்டு வருகிறது. பெரிய மகாத்மா இவரு,’ என்று கேலியாகக் கூறினன்.

உடனே கணபதியும், வேடிக்கையாக, ஏண்டாசேகர், :பாபு’, என்ருலும் மகாத்மா' என்ருலும் ஒன்றுதான். இது தெரியாதா உனக்கு?’ என்ருன்.

இதைக்கேட்டு பாபுவும் அவர்களோடு சேர்ந்து சிரித் தான்.