பக்கம்:ஒரு மாணவன் மகாத்மாவாகிறான்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45


ஒவ்வொருவர் முகத்திலும், பாபுவின் இந்த அவசரக் கூட்டம் எதற்கு?’ என்கிற கேள்விக் குறியே முளைத்து நின்றது. சமீபத்தில் ஹாஸ்டல் ரகளை அதல்ை மாணவர் களிடையே எழுந்த மனக்கசப்பு: பாபுவுக்கும் மூர்த்திக்கு மிடையே சிறு கீறலாக இருந்த பிளவு, இப்போது பெரிய இடைவெளியோடு பல பிரச்னைகளுக்கும் காரணமாகி ஒரு நீண்ட விசாரணையையே முதல்வர் மூலம்உருவாக்கி நிற்பது, ஆகிய அனைத்தையும் கல்லூரி மாணவர்கள் அனைவரும் அறிவர். அதற்கு மத்தியில் பாபு இப்போது அவசரமாகக் கூட்டியிருக்கும் கூட்டத்திற்கு ஏதோ ஒரு முக்கியக் காரணம் இருக்க வேண்டும் என்கிற ஆர்வத்திலேயே அவர்கள் அனே வரும் கூடிவந்திருந்தனர்.

ஹாஸ்டல் ரகளைக்குப் பிறகு ஹாஸ்டல் பொருட்கள் காணுமற் போனது பற்றி எழுந்த புகாரும், அந்தப் பழி எப்படியோ சுற்றி வளைத்து பாபுவின் தலை மீது வந்து விடித் திருக்கிறது. அப்படி ஒரு பேச்சு அடிபடுகிறது என்கிற செய்தியும் வதந்திகளாகப் பரவி பல மாணவர்களின் செவிகளுக்கு எட்டியேயிருந்தது.

அந்தச் செய்தி, பாபுவின் நேர்மையையும் அவனது உயர்ந்த பண்புகளையும் கடமை உணர்ச்சியையும் அன்பு இதயத்தையும் அறிந்திருந்த மாணவர்கள் பலருக்கு மன வேதனையை அளித்தது. ஆனால், மூர்த்தியின் சொற் ஜாலங்களில் மயங்கி அவனுடைய குனதிசயங்களால் ஈர்க்கப் பட்டவர்களுக்கோ அந்தச் செய்தி தேகை இனித்

திது.

எப்படியோ மாணவர்களிடையே, இரு மாறுபட்ட மனே பாவத்தையுடையவர்கள் உருவாக்கிவிட்டார்கள். இனிப்பை நாடும் நண்பர்கள் மூர்த்தியின் தேன் சிந்தும் பேச்சைக் கேட்க ரமேஷின் வீட்டிற்குச் சென்றிருந்தனர். பாபுவின் பால் மட்டற்ற பாசமும், நம்பிக்கையும் கொண்டி ருக்கும் மாணவர்கள், தங்களுடைய அனுதாபத்தையும் தொடர்ந்த ஆதரவையும் காட்டி பாபுவை மீண்டும் உற்சாக