பக்கம்:ஒரு மாணவன் மகாத்மாவாகிறான்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47


பாபு இதைக் கூறியதும் கூடியிருந்த மாணவர்கள் 'ஷேம், ஷேம்,’ என்று பெரிதாகக் கைகொட்டிக் கோஷ மிட்டனர்.

‘'என் இனிய நண்பர்களே, நான் இந்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்டது எவரையும் தாக்கிப் பேசவோ எவர் மனமும் புண்படவோ கொண்ட எண்ணத்தினுல் அல்ல என்பதைவிட நீங்கள் இப்படிக் கைதட்டி, கேலிக் குரல் எழுப்பியதுதான் என் மனத்தை மிகவும் புண்படுத்துகிறது. இது முன்னதை விடக் கடுமையானது.

நியாயத்தை மதிப்பவர்களால் தான். நியாயத்தை உணர்பவர்களால் தான் - நியாய தை வழங்கவும், அதை நிலை நாட்டவும் முடியும். அவர்கள் தான் அதற்குத் தகுதி படைத்தவர்கள்.

சுப்பையாவைத் தாக்கியது, ஹாஸ்டல் பொருட் களுக்குச் சேதம் விளைவித்தது ஆகியவை எந்த நியாயத்தை யும் நிலைநிறுத்தியதாகாது. அதஞலேயே அதைச் செய்த வர்கள் தவறு செய்தவர்கள் ஸ்தானத்தில் இருக்கிரு.ர்கள். அந்தச் தவறைச் செய்தவர்களும் நம் அனைவரின் நண்பர் களே; அவர்களும் தங்கள் தவறை உணர்ந்து திருந்தச் சந் தர்ப்பம் அளிக்க வேண்டும். அப்படி அளிக்கப் பட்டுள்ள சந்தர்ப்பத்தை நாம் அவர்களைப் பற்றி அவர்கள் செய் துள்ள தவறைப் பற்றி, கேலி செய்வது அவர்கள் மனம் மாறச் செய்யும் முயற்சியைப் பாதித்துவிடும். ஆகையின லேயே உங்கள் சார்பாக நீங்கள் ஷேம், ஷேம், ! என்று கூறியதற்கு நான் மன்னிப்புக் கேட்டுக் கொள் கிறேன்.

அடுத்தபடியாக, இப்போது என்னிடம் கோபு வந்து நமது கட்சியிலுள்ள சிலர் ரமேஷின் பேச்சைக் கேட்டு மூர்த்தியின் கட்சிக்குப் போய் விட்டதாகக் கூறி வருந்தி ய தைக் குறிப்பிட வேண்டும்.