பக்கம்:ஒரு மாணவன் மகாத்மாவாகிறான்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48


இதைக் கூறுகையில், ரோஜாச் செடியில் முள் இருப் பதற்கு வருந்தாதே; முட்செடியில் மலர் இருப்பதற்கு மகிழ் வாய்-என்று அறிஞர் ஆவ்பரி கூறிய வார்த்தைதான் நினைவிற்கு வருகிறது.

என்னிடம் அன்பு கொண்டிருப்பவர்களே என் கட்சியி லிருப்பவர்களை (எனக்கென்று ஒரு கட்சியும் இல்லை. ஆயினும் அப்படி மற்றவர்கள் குறிப்பிடுவதால் நானும் குறிப்பிட்டேன்; அவ்வளவுதான்) - கலைப்பதற்கு ரமேஷைப் போன்றவர்களும்; அப்படிக் கலைந்து வருபவர்களைக் கரம் நீட்டி வரவேற்க மூர்த்தியைப் போன்றவர்களும் காத் திருக்கும் போதுகூட இன்னும் என்னிடம் நம்பிக்கை வைத்து என்னுடனேயே இருக்கிறீர்களே நீங்கள் இத்தனை பேரும் இதை எண்ணி மகிழ்வதை விடுத்து அதையா எண்ணி என்னை வருந்தச் சொல்கிறீர்கள்?

என்னுடைய கவலை எல்லாமே என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவர்களைப் பற்றியும் அவர்களுடைய நம்பிக் கைக்கு நான் பாத்திரமானவன் தான் என்பதைப் பற்றியும் மட்டுமே தான்.

சுப்பையாவைத் தாக்கியது, ஹாஸ்டல் பொருட் களுக்குச் சேதம் விளைவித்தது ஆகியவை, என்னுலும் எனக்கு மேற்பட்டவர்களாலும் விசாரணைக் குறியவை மட்டுமே. அதுவும் உங்களுக்காகவே உங்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட செகரட்டரி என்கிற பதவி வகிக்கிற காரணத்தினுல்தான்.

ஆனல் நானே இப்போது ஹாஸ்டலில் திருடு பொன பொருட்கள் பற்றி விசாரணைக்குட்படும் சூழ்நிலை உருவாகி யிருப்பது உங்களில் பலருக்கு த் தெரிந்திருக்கும் என்று எண்ணுகிறேன்”, என்று பாபு கூறி முடிக்கும் முன்னர் "எங்களுக்குத் தெரியாது’’ என்கிற குரல்களும், பாபு மீது விசாரணையா? இந்த அக்சிரமத்தை அனுமதியோம்' என்கிற குரல்களும் கூட்டத்தின் பல மூலைகளிலிருந்தும் ஒலித்தன.