பக்கம்:ஒரு மாணவன் மகாத்மாவாகிறான்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50


பாபுவினுடைய நீண்ட நேரப் பேச்சை பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்த மாணவர்கள் அவன் இறுதியாகக் கூறிய தன்னுடைய பதவியைச் செய்யாத ஒரு குற்றத்தின் நிமித்தம் யாரோ கிளப்பிவிட்ட அபாண்டத்திற்கு அடி பணிவது போல், ராஜிமைாச் செய்து விட்டதாகக் கூறி யதை ஜீர்ணிக்க இயலாதவர்கள் போல் கோஷித்தனர்.

'பாபு பதவி விலகக் கூடாது; உண்மைக் குற்றவாளி

பைக் கண்டுபிடித்து மூர்த்தியின் முகத்தில் கரியைப் பூசாமல் விடமாட்டோம் என்று கூட்டமாகக் கூச்ச

லிட்டனர்.

அமைதிப்பட்டிருந்த உணர்ச்சி மீண்டும் அதன் புதிய உத்வேகத்தோடு பிறிட்டு விட்டதைக் கண்ட வார்டன் கணநேரம் குழம்பிப் போளுர் பாபுவினுல் பாபுவிற்காக எழுந்த மாணவர்களின் உணர்ச்சியை உள்ளக் கொந்த ளிப்பை பாபுவிளுல்தான் சமாதானப்படுத்த முடியும் என்று எண்ணியோ என்னமோ அவர் பாபுவையும் மாணவர் களையும் மாறி மாறிப் பார்த்தார்.

பாபு மீண்டும் ஒரு முறை தன்னுடைய ஆசனத்திலிருந்து

எழுந்தான். அவனுடைய மனமும் உடலும் மிகவும் சோர்ந்து போயிருந்தது. பலதரப்பட்ட உணர்ச்சிகளால்

அவன் உள்ளம் தவித்தது. தன் மீது மாணவர்கள் வைத் திற்கும் அன்பைக் கண்டு பெருமை கொள்வதற்கு மாருக அவன் மனம் துயரமே கொண்டது. ஆம்! அவர்களின் அன்புச் சுமையை அவனுல் தாங்க முடியாததே அதற்குக் காரணம்.

எழுந்து நின்ற அவன், மாணவர் களிடம் அமைதியா யிருங்கள் என்று வேண்டுகோள் கூட விடுக்கவில்லை; பாபு எழுந்துநின்ற சில நிமிஷங்களுக்கெல்லாமே கூட்டம் அமைதி கொண்டு விட்டது. பாபு பேசத் தொடங்கினன். ஆளுல் அவன் குரலில் முன்பிருந்த உத்வேகம் இல்லை; உணர்ச்சி இருந்தது. ஒரக்க ஒலிக்கவில்லை-தீர்க்கமாக இருந்தது தெளிவாகக் கேட்டது.