பக்கம்:ஒரு மாணவன் மகாத்மாவாகிறான்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56


வழங்கி விட்டீர்களே சார். இது என்ன நியாயம்?' என்ருன்

மூர்த்தி.

'நான் எப்போது தீர்ப்பு வழங்கினேன் மூர்த்தி!'

என்ருர் மேலும் தன் வியப்யை அடக்க மாட்டாமல்.

'இப்போது சொன்னசீர்களே &Frrfi; பாபுவைப் பற்றி நான் துஷ்பிரசாரம் செய்கிறேன் என்று.”*

'ஓ! அதைத் சொல்லுகிருயா?’ என்ருர் முதல்வர்.

"ஆமாம் சார், அதைத்தான் சொல்லுகிறேன். பாபுவும் சரி நானும் சரி மற்றும் உங்கள் கீழ் இக்கல்லூரியில் படிக் கும் அனைத்து மாணவர்களுக்குமே தாங்கள் தான் முதல்வர். அதே போல் அனைத்து மாணவர்களிடமுமே பாரபட்ச மற்ற அன்பைக் காட்டவும், அறிவைப் புகட்டவும் கடமைப்பட்ட வர்கள் என்று நான் கூறினல் அது தவருகாது என எண்ணு கிறேன்.'

  • நீ சொன்னலும் சரி, சொல்லாவிட்டாலும் சரி,உங்கள் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு டுற்றங் குறைகள் இருப்பி னும், நீங்கள் அனைவருமே என் இரு கண்மணியைப் போன்றவர்கள். உங்கள் அனைவரையும் சமமாகவே நான் பாவிக்கிறேன்: அன்பு காட்டுகிறேன். குற்றங் குறைகளுக் காக ஒவ்வொருவரையும் ஒதுக்கிக் கொண்டே போளுல் இறுதியில் ஒருவன்கூட மிஞ்சமாட்டான்.இதில் உனக்கென்ன சந்தேகம் மூர்த்தி?’’

என் சந்தேகம் தெளிந்து விட்டது சார். பாபு என்ன எதிர்த்துப் போட்டி போட்டு ஜெயித்தவன். ஆனல் அதற் காக அவன் மீது வீகைத் திருட்டுப் பழி சுமத்தி துஷ்பிர சாரம் செய்ய வேண்டுமென்பது என் விருப்பமல்ல சார்.

பாபு மெஸ்ஸிலிருந்து எவர்சில்வர் சாமான்களைத் திருடி விருப்பது உண்மை. அதை அவன் வீட்டிலுள்ள கார் ஷெட் டில் ஒளித்து வைத்திருப்பது உண்மை. நீங்கள் இப்போதே என்னுடன் வந்தால் அதை நான் நிரூபித்துக் காட்டத் தயார் சார்' என்று முர்த்தி அடித் ப் பேசினன்.