பக்கம்:ஒரு மாணவன் மகாத்மாவாகிறான்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61


மும் பாபுவின் மீது கொண்டுள்ள பரிவிஞல் வீணுக்குவ தாகவே உனக்குத் தோன்றும் என்று கூறியபடி முதல்வர் தன் மேஜை மீதிருந்த மணியை அடித்தார்.

உள்ளே வேகமாக வந்த பியூன் பொன்னுசாமியிடம், டிரைவரிடம் காரை இங்கே எடுத்துக் கொண்டு வரச் சொல்லி விட்டு பாபு கிளாசுக்கு வந்து விட்டால் தான் கூப் பிடுவதாகக் கையோடு அழைத்து வா என்று கட்டளை இட்டார்.

மூர்த்தி இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. முதல் வரை மட்டும் தனியாகத் தன்னுடன் அழைத்துச் சென்று சோதனை போடவேண்டுமென்று அவன் விரும்பியதற்கு மாருக முதல்வர் பாபுவையும் அழைத்து தன்னைச் சந்திக்க வைப்பார் என்று அவன் எண்ணவே இல்லை.

டிரைவர் காரை எடுத்துக்கொண்டு வந்து முதல் வரின் அறைக்கு எதிரில் உள்ள போர்டிகோவில் நிறுத்தி கதவைத் திறந்து விட்டார். பின் சீட்டில் ஏறி அமர்ந்து கொண்ட முதல்வர் மூர்த்தியையும் தன் அருகில் அமரும் படிக் கூறினர்.

பரவாயில்லை சார் நான் முன் சீட்டில் உட்கார்ந்து கொள்கிறேன் என்று மூர்த்தி மிகவும் தயங்கியபடிக் கூறினன்.

உடனே முதல்வர், பரவாயில்லை. நீ என் பக்கத்தி லேயே உட்காரு; முன் சீட்டில் பொன்னுசாமி உட்கார்ந்து கொள்ளுவான் என்று அவர் கூறிக் கொண்டிருக்கும் போதே பொன்னுசாமி பாபுவையும் அழைத்துக் கொண்டு காரின் அருகே வந்து நின்றன்.

பொன்னுசாமி ரூமைப் பூட்டிவிட்டு நீயும் எங்களு டன் புறப்பட்டுவா என்று உத்தரவு பிறப்பிக்கும்போது தான் பாபு காரினுள் முதல்வர் இருப்பதைக் கண்டான் ஆளுல் அதே சமயம் வேறு எங்கோ முகத்தைத் திருப்பிக்