பக்கம்:ஒரு மாணவன் மகாத்மாவாகிறான்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62


கொண்டு முதல்வர் அருகில் அமர்ந்திருக்கும் மூர்த்தியைக் கண்டதும் பாபுவுக்கு ஒரு கணம் ஒன்றுமே புரியவில்லை. கண நேரத்திற்குள் அவன் உள்ளத்தில் எண்ணற்ற விவரம் புரியாத சிந்தனை அலைகள் எழுந்து அலைமோதின. ஆயினும் தன்னுடைய உணர்ச்சிகள் எதையும் வெளிக்குக் காட்டிக் கொள்ளாமல் 'என்னைக் கூப்பிட்டீர்களாமே சார்’ என்று கேட்டான். உடனே முதல்வர் "ஆமாம் என் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொள். உன் வீட்டிற்கு நாங்கள் எல் லோரும் வருகிருேம்’ என்று கூறினர்.

அதற்கு மேல் பாபு, ஏன்? எதற்கு? என்று எவ்வித கேள்வியும் எழுப்பாமல், மெளனமாக முதல்வரின் மறுபக்க மாக வந்து அமர்ந்து கொண்டான். இவ்வளவையும் பார்த் துக்கொண்டு, ஒரு வார்த்தைகூடப் பேசாமல் மூர்த்தி ஏதோ பெரிய யோசனையில் ஆழ்ந்திருப்பவனைப் போல் காரி லிருந்தபடியே ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். இதற்குள் முதல்வரின் அறையைப் பூட்டிக்கொண்டு பொன்னுசாமியும் வந்துவிடவே முன்புறக் கதவைத் திறந்து விட்டார் டிரைவர். பொன்னுசாமி ஏறி அமர்ந்துகொண் டதும் யார்மீதோ வாரி இறைப்பதுபோல் புழுதியைக் கிளப்பிக் கொண்டு கார் வேகமாகக் காம்பெளண்டைக் கடந்து சென்று கொண்டிருந்தது.

8 மூர்த்தி மூர்ச்சையானுன்

'முதலில் தூசியைக் கிளப்பிவிடுகிருேம். பின்னல், பார்க்க முடியவில்லையெ

என்று முறையிடுகிருேம்.

-பிஷப் பார்க்லி.

பாபுவின் வீட்டு வாசலில் வந்து கார் நின்றது. அதி லிருந்து முதலில் கீழே இறங்கிய பாபு, முதல்வரையும் மூர்த் தியையும், வாருங்கள்’’ என்று அன்புடன் கூறி தன் வீட்