பக்கம்:ஒரு மாணவன் மகாத்மாவாகிறான்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63


டிற்குள் வரவேற்ருன். அவனுடைய குரலில் அன்பு தெறித்தது.

பாபுவினுடைய இந்தச் செய்கை முதல்வரின்-ஏன்

மூர்த்தியினுடைய உள்ளத்தையும்கூட ஏதோ செய்வது போலிருந்தது. புறப்படும்போது முதல்வர் அவனிடம் ஏதும் கூருமலேதான் பாபுவைக் காரில் ஏறிக்கொள்ளச்

சொன்னர். ஆனல், வழியில் நடைபெற்ற சம்பாஷணைகளி லிருந்து அவனுக்கு அவர்கள் எல்லாம் எதற்காகத் தன்

வீட்டிற்கு வருகிருர்கள் என்பது நன்கு புரிந்திருக்கும்.

ஆன ல் அதன் பிறகும் அவனிடம் எவ்வித மாற்றமும் கானப்

படவில்லை.

அவனுடைய முகம் நிர்மலமாக இருந்தது. கண்களில் காந்தக் கல்லின் ஒளி வீசிற்று. அதைப் பார்க்கவே துணிச்ச லற்றவன் போல் மூர்த்தி முதல்வரைப் பின் தொடர்ந்தான்.

இவர்கள் வந்த சமயம் பாபுவின் அப்பா வீட்டில் இல்லா ததால், பாபுவின் தாயாரே அனைவரையும் அன்புடன் வர வேற்று அமரும்படி கூறினுள். இவர்தான் என் அம்மா’’ என்ருன் பாபு. முதல்வர் வணங்கினர். பிறகு பாபு தன் னுடைய ம்மாவுக்கு முதல்வரையும் மூர்த்தியையும் அறிமுகப்படுத்திவிட்டுத் திரும்பும்போது, 'மூர்த்தியை எனக்குத் தெரியாதாடா என்ன?’ என்னும் உரிமை யுடன் சிரித்தபடி கூறிக்கொண்டே வேகமாக அடுக்களைக்குச் சென்ருர்.

அதன் குறிப்பறிந்த முதல்வர், பாபுவைத் தன் அருகில் அழைத்து ரகசியமாக காதில் ஏதோ கூறினர். உடனே பாபு * பரவாயில்லை சார்...” என்ருன். ஆனல் முதல்வர். '"நான் சொன்னதை முதலில் உன் அம்மாவிடம் போய்ச் சொல்லி விட்டு வா’ என்று சற்று கண்டிப்பான குரலில் கூறவே, வேறு வழியின்றி பாபு சோர்ந்த முகத்துடனேயே அடுக் களையை நோக்கிச் சென்ருன்.