பக்கம்:ஒரு மாணவன் மகாத்மாவாகிறான்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67


சொன்னப்போ நான் சொன்னதைக் கேட்டியா. அப்போ சவால் விட்டு நீ பேசினதையெல்லாம் இப்போ நினைவுபடுத்த ணுமா?’ என்று கோபமாக முதல்வர் கேட்டதும் மூர்த்தி தன்னைச் சட்டென்று தயார்ப் படுத்திக்கொண்டு விட்டான், -‘நாய் வேஷம் போட்டால் சரியாகக் குலைக்க வேண்டாமா?

'கார்ஷெட்டுக்குப் பக்கத்திலே இருக்கிற அவுட் ஹவுஸிலே கொண்டு போய் பாபு வைத்திருக்கிறதாகத்தான் அவன் சொன்னன்’’ என்ருன் மூர்த்தி.

உடனே முதல்வர்! சரி, அதை உடனே சொல்ல வேண்டியதுதானே, எதற்காக இத்தனை தயக்கம். திருடின பாபு கூசாமல் நிற்ருென்; அதைக் கண்டு பிடிக்கப் போகிற நீ வீரனேப்பொல் அல்லவா வரவேண்டும்! போகலாம் வா’’ என்று புறப்பட்டவர் தன்குேடு கூடவரும் பாபுவிடம் "அவுட் ஹவுஸ் திறந்திருக்கிறதா?’ என்று கேட்டார்.

ே 'இல்லை, பூட்டி இருக்கிறது. இதோ சாவியோடுதான் சார் வருகிறேன் என்ருன்.

பாபுவிடமிருந்து பெற்றுக்கொண்ட சாவியை பொன்னு சாமியிடம் கொடுத்து பூட்டைத் திறக்கச் சொன்னர். இரண்டு கதவையும் நன்ருகத் திறந்துவிடச் சொன்னர். அவுட் ஹவு ஸ் என்று பெயரே ஒழிய ஏறத்தாழ விசால மான ஒரு கார் ஷெட் மாதிரித்தான் அது இருந்தது. ஆளுல் அது சமீபத்தில் தான் சுத்தமாகப்பெருக்கிமெழுகிக்கோலம் போடப்பட்டதுபோல் பளிச்சென்று இருந்தது. ஜன்னல்கள் எல்லாம் திறந்துவிடப்பட்டன. ஒன்றிரண்டு ஜன்னலுக்கு கதவுகளே இல்லை. வெளிச்சம் உள்ளே தங்கு தடையின்றிப் பாய்ந்து, 'இதுக்குள்ளே, பிளேட்டும் இல்லே; ஸ்பூனும் இல்லே, நல்லாப் பார்த்துக்குங்க’, என்று கூருமல் கூறின.

உள்ளே அடசல், பரணை ஏதாவது இருந்தால் அல்லவா குடைந்து தேடிப் பார்ப்பதற்கு விரித்த உள்ளங்கை போல் திறந்து கிடந்த அறை வெறிச் சென்று இருந்தது.