பக்கம்:ஒரு மாணவன் மகாத்மாவாகிறான்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68


'இங்கே யாராவது குடியிருந்தார்களா? இவ்வளவு சுத்தமாக இருக்கிறதே ’’ என்று கேட்டார் முதல்வர்.

உடனே பாபு, 'இது குடியிருக்க லாயக்கில்லை. அவுட் ஹவுஸ் என்று பெயர்தானே ஒழிய-லம்பர் ருமாகத்தான் ரொம்ப வருஷம் பூட்டிக் கிடந்தது. போனவாரம் காசிக்குப் போகிற வழியில் எங்க பாட்டி இங்கே வந்து இரண்டு நாள் தங்கினுள். அவளுக்கு ஆசாரம் அதிகம். தன் அடுப்பில் தானே சமைத்துத்தான் சாப்பிடுவாள். அதற்காக அம்மா இதிலிருந்த குப்பை கூளங்கள், தட்டுமுட்டு சாமான்களை எடுத்து ஷெட்டுக்குப் பின்னல் போட்டுவிட்டு வேலைக் காரியை விட்டு இந்த அறையை அம்மா பாட்டிக்காகச் சுத்தம் செய்து கொடுக்கச் சொன்ஞள். பாட்டி நேற்றுத் தான் ஊருக்குப் போளுள்' என்று பாபு பதில் கூறினன். ஆளுல் அந்த விரிவான பதிலைக் கேட்ட மூர்த்தியின் முகம் ஏனே கண நேரத்திற்குள் பேயறைந்ததுபோல் மாறி விட்டது. அதை முதல்வர் கவனித்தபடியே, அப்புறம் என்ன மூர்த்தி, அவுட் ஹவுஸில் இல்லை என்று ஆகிவிட் டது: ஆனல் அதை ஏன் பாபு இங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்றி வைத்திருக்கக் கூடாது? வந்ததுதான் வந்தோம், வீட்டையும் சோதித்துவிடுவோம் வா’, என்று கூறியபடி முதல்வர் திரும்பும்போது, 'சார் உங்களுக்கு ஒரு போன்: கால் வந்திருக்கிறது’. பாபுவின் அம்மா வெளியே வந்து கூறினுள்.

பொன்னுசாமியிடம் அவுட் ஹவுசைப் பூட்டிச் சாவி யைக் கொண்டுவருமாறு உத்திரவிட்டுவிட்டு முதல்வர் வேகமாக உள்ளே சென்ருர் பாபுவும், மூர்த்தியும் அவரைப் பின் தொடர்ந்தனர்.

"ஹலோ...நான்தான் பிரின்சிபால் சிவராமன் பேச றேன். யாரு இந்தர்சந்தா?’ என்று கேட்டார் முதல்வர்.

"ஆமாம் சார்....காலமே பத்தரை மணிக்கே வர்ரதா சொன்னிங்களே! இப்போ மறுபடி காலேஜுக்கு போன்