பக்கம்:ஒரு மாணவன் மகாத்மாவாகிறான்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70


பண்ணி அவன் பேரைக் கெடுத்திருக்கியே; அது என்ன ஆச்சு? உன் மேலே அவன் மான நஷ்ட வழக்கே போட லாமே?’ என்று முதல்வர் கூறிக்கொண்டிருக்கும்போதே, கல்லூரியிலிருந்து விஷயமறிந்து சேகர், கணபதி, நேதாஜி, சுந்தரம் எல்லோரும் அடக்க முடியாத ஆவலோடு பாபு வின் வீட்டைத் தேடிவந்து விட்டனர். அப்போது

முதல்வருடைய கேள்விக்கு மூர்த்தி தயங்கியவாறு பதில் சொல்லிக் கொண்டிருந்தான் :

'நான் பாபு:மீது கொடுத்த புகாரை வாபஸ் வாங்கிக் கொண்டுவிடுகிறேன் சார்?’’

ஒ! நீ யாரைப்பற்றி எது வேண்டுமானலும் இஷ்டத் துக்கு என்னிடம் புகார் எழுதிக்கொடுக்க வேண்டியது: அவமானப்படுத்த வேண்டியது: அகப்பட்டுக்கொண்ட வுடன் பல்டி அடிப்பது இல்லே வாபஸ் வாங்குவது-இது தான் நீ மாணவர்களைத் தலைமை தாங்கி நடத்திச்செல்லுகிற லட்சணமோ?’’ -

மூர்த்தி தனிந்த குரலில், 'நான்தான், என்னிடம் வந்து சொன்னவன் பேச்சைக் கேட்டு மாந்து போனேன் என்று சொன்னேனே சார்!’ என்று கூறிஞன்.

உடனே முதல்வர், நீ இன்று நண்பன் சொன்னன் என்பாய்; நாளை கணபதி லேப்ரரியைக் கொள்ளையடித்துக் கொண்டு போனதை நானே இரண்டு கண்ணுல் பார்த்தேன்: விசாரணை தேவை என்பாய் உன் பேச்சைக் கேட்டு உன் பின்னல் இப்படியெல்லாம் நானும் ஓடிவரவேண்டும்; இல்லா விட்டால் என்னைப்பற்றி காலேஜ் சுவற்றிலெல்லாம் தாறு மாருக எழுதுவாய். இதுதானே உன் தொழில்? அந்தத் தொழிலுக்கு ஜே போட, நல்ல மாணவர்களை எல்லாம் கெடுத்து உன் பின்னல் ஒரு கூட்டத்தை வேறு கூட்டி வைத்திருக்கிருய். உன்கூடச் சேராததற்காக பாபுவின்மீது பழி;-அப்படித்தானே?’’