பக்கம்:ஒரு மாணவன் மகாத்மாவாகிறான்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75


மூர்த்தி இப்படி மாட்டிக்கொண்டு காலை வாரி விடுவான் என்று ரமேஷ் கூட எண்ணவில்லை.

பார்க்கப்போல்ை, அன்று உண்மையில் அது ஒரு விசாரணை தினமே அல்ல. விசாரிப்பதற்கும் ஏதும் இல்லா மல் தீர்ப்புக் கூறுவதற்கும் ஒன்றுமில்லாமல் எல்லாமே இயல்பாய் நடக்க வேண்டிய விதத்தில் நடந்து முடிந்து போன ஒரு சம்பவத்தைப் பற்றிய விளக்கம் தரும் நாள் என்று தான் கூறவேண்டும்.

பேசுவதற்காக எழுந்து நின்ற முதல்வர், தன் எதிரே குழுமியிருக்கும் மாணவர் கூட்டத்தைப் பார்த்து வியப்பில் ஆழ்ந்து விட்டார். அப்போது அட்டெண்டன்ஸ் எடுத்தால் பரீட்சைக்குக் கூட இப்படி ஆஜாாகியிருக்க மாட்டார்கள் போலிருக்கிறது-அப்படி ஒருவர் பாக்கி இல்லாமல் வந்திருந் தனர்.

முதல்வர் தன்னுடைய பேச்சைத் துவங்க ஆரம்பித்த போது முன் வரிசையில் இருந்த ஒரு மாணவன் எழுந்து வந்து, இக்கல்லூரியின் நல் மாணவர் சங்க சார்பில் இம் மலர் மாலையை அணிவிக்கிறேன் என்று ஆளுயர ரோஜா மாலையொன்றை முதல்வரின் கழுத்திலிட்டான். மாணவர்கள் கை தட்டி 'நீதிக்கும் நேர்மைக்கும் புகழ் பெற்ற நம் மதிப் பிற்குரிய முதல்வர் வாழ்க!” என்று பெரிதாகக் கோஷ மிட்டனர்.

அது அடங்கு முன், வேறு இரண்டு மாணவர்கள் கையில் மாலையுடன் மேடைக்கு வந்தனர். உடனே முதல்வர் அவர் களைப் பார்த்து, இப்படி இங்கே வந்திருக்கிற எல்லோருமே போட ஒவ்வொரு மாலை கொண்டு வந்திருக்கிறீர்களோ? - என்று சிரித்தபடிக் கேட்டார்.

உடனே அவர்கள், இல்லை சார், இதோடு சரி, நீங்கள் பேச்சைத் தொடரலாம் என்று கூறியபடி 'புதிய நல் மாணவர் சங்க சார்பில் இந்த மலர் மாலையை மதிப்பிற்

குரிய வார்டனுக்கு அணிவிக்கிறேன் என்று ஒரு மாணவ