பக்கம்:ஒரு மாணவன் மகாத்மாவாகிறான்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76


லும், மற்ருெருவன், 'சுப்பையாவின் சார்பிலும், கல்லூரி சிப்பந்திகள் சார்பிலும், இம் மலர் மாலையை தோழர் பாபுவுக்கு அணிவிக்கிறேன்” என்று கூறியபடி பாபுவின் கழுத்தில் மாலையைப் போட்டு விட்டுத் திரும்பும்போது முதல்வர் அவனைத் தடுத்துத் தன் அருகில் நிறுத்திக் கொண்டு எனக்கு ஒரு சந்தேகம் கேட்கலாமா?’ என்று கேட்டார்.

'கேளுங்கள் சார்' என்று மிகவும் தணிந்து அவன் பதிலளித்தான்.

உடனே முதல்வர், அதென்ன, 'நல்மாணவர் சங்கம் புதிய நல் மாணவர் சங்கம், அப்புறம் இன்னும் "மிகப் புதிய நல்மாணவர் சங்கம் புத்தம் புதிய ந. ம. சங்கம் இப்படியெல்லாம் வேறு இருக்கிறதா? இதை எல்லாம் எப்போது, யார் ஆரம்பித்திருக்கிருர்கள்?' என்று கேட்டார்.

அதற்கு அந்த மாணவன், புதிதாக அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை சார். முன்பு க. க. மா. சங்கம் (கலைமகள் கல்லூரி மாணவர் சங்கம்) என்றிருந்தது மூர்த்தி எலக் ஷனில் ஜெயித்து தலைவனுக வந்ததும். அத்தனை நீளமான பெயர் வேண்டாம் என்று மூர்த்தி மாணவர் சங்கம் என்று மாற்றினன். பிறகு மூர்த்தி தோற்று பாபு ஜெயித்ததும் சங்கப் பெயரை 'பாபு மாணவர் சங்கம்’ என்று இன்னும் அழகாகச் சுறுக்கி மாற்ற வேண்டும் என்று அவன் ஆதர வாளர்கள் கூறினர்.

பாபு இதை வன்மையாக எதிர்த்தான். மூர்த்தியின் பெயரிலேயே சங்கம் இருக்கட்டும் என்ருன். ஆளுல் பாபு வின் கட்சியினர் கேட்கவில்லை. மூர்த்தி கோஷ்டியினரும் தங்கள் மாஜித் தலைவரின் பெயரை சங்கம் மாற்ற அனுமதிக்க வில்லை. அதன் பிறகு வேறு வழியின்றி, சங்கம் இரண்டு பிரிவாகி, மூர்த்தி மா. சங்கம்; பாபு மா. சங்கம் என்கிற பெயரில் இயங்கி வந்தது.