பக்கம்:ஒரு மாணவன் மகாத்மாவாகிறான்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78


வெட்ட வெட்ட, வெறுப்போ, விரோதமோ பாராட் டாது,மீண்டும் மீண்டும்தொடர்ந்துநிழலை அளிக்க வளர்ந்து கொண்டே இருக்கும் மரங்களைப் பார்த்துக்கூட மனிதன் இந்தப் பாடத்தைக் கற்றுக் கொள்வதில்லை. பெரியவர்க ளிடமே ஏற்படாத இந்த மாறுதலை மாணவர்களாகிய உங்களிடம் எதிர்பார்க்க முடியாதுதான்; ஆயினும் நாளை நீங்களும் பெரியவர்களாகப் போவதாலேயே இதனைக் கூறினேன்.

இன்றைய கூட்டம் எதற்காகக் கூட்டப்பட்டிருந்தது: பின் அது எப்படி எல்லாம் உருமாறிவிட்டது என்பதெல் லாம் உங்களில் பலருக்கு இதற்கு முன்பே தெரிந்திருக்கும் என நம்புகிறேன். ஆகவே அதுபற்றி நீங்கள் அறியா ததை மட்டும் கூறுகிறேன்.

தன் வகுப்பறைக்குள்ளிருந்து ஒரு மாணவனைப்பற்றி ஆசிரியர் அறிந்து கொண்டிருப்பது என்பது வேறு வெளி யுலகில் அவனப்பற்றி அவர் அறிந்து கொள்வது என்பது வேறு. ஆளுல் முன்னதற்கு மட்டுமே பொதுவாக ஒரு ஆசிரியருக்கு வாய்ப்பு இருப்பதால் அதை வைத்துக் கொண்டு மட்டுமே தன் மாணவனை அவர் எடைபோட வேண்டியவராயிருக்கிருர் ஆளுல், இரு துருவங்களிலும் மாணவர்களின் மனநிலையை ஆராய்ந்து அறிய எனக்கு வாழ்க்கையில் நிறைய வாய்ப்புக் கிட்டியுள்ளது. இந்த அனுபவம் எனக்கு உணர்த்திய உண்மையைத்தான் நான் இன்று உங்களுக்குக் கூறப் போகிறேன்.

வெயில் பட்டாலே உருகிவிடும் வெண்ணையைப் போன்ற புறத்தோற்றமுள்ள மாணவர்களைப்பற்றி எல்லோ ருக்குமே புரியும்; யாருக்குமே பிடிக்கும்.

ஆனல் கடின ஒட்டினுள் இனிய மணத்தையும் அரிய சுவையையும் அடக்கிக்கொண்டுள்ள விளாம்பழம் போன்ற மாணவர்களும் உண்டு. ஒடு உடையும் போதுதான் அவர்

களை நாம் புரிந்துகொள்ள முடியும்; அதன் பிறகே இனிய