பக்கம்:ஒரு மாணவன் மகாத்மாவாகிறான்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80


டத்தோடு கட்டமாய் உங்கள் மத்தியில் உங்களில் ஒருவ ஞகவாவது எதிரில் நிற்க முடிகிறதா?

இது நான் மூர்த்தியை உங்கள் மத்தியில் அவமானப் படுத்த வேண்டும் என்பதற்காகக் கூறிய வார்த்தையல்ல. இதற்காகவோ அல்லது வேறு எதற்காகவும் மூர்த்தியை உங்களில் ஒருவர்கூட மரியாதைக் குறைவாகப் பேசவோ, ஏன், எண்ணவோ கூட நான் அனுமதிக்கமாட்டேன். ஆல்ை உப்பைத் தின்றவன் தண்ணிரைக் குடித்தே ஆக வேண்டும் என்பதற்காகவே இதைக் கூறினேன்.

உங்களில் சிலருக்குத் தெரிந்தும் பலருக்குத் தெரியாதது மான ஒரு உண்மையைக் கூறப்போகிறேன்; அதைக்கேட்டு விட்டு யாரும் எவ்விதக் கூச்சலோ கோஷமா எழுப்பக் கூடாது. கேளுங்கள் ஹாஸ்டலிலிருந்த எவர்சில்வர் பிளேட் டுகளையும் ஸ்பூன்களையும் ரகசியமாகத் திருடிச் சென்ற குற்ற வாளி மூர்த்தியே என்று முதல்வர் கூறியதும் அவர் முன் ேைம கேட்டுக் கொண்டதாலோ என்னவோ கூச்சலும் கோஷமும் இல்லாவிட்டாலும் அங்கு மாணவரிடையே பெரும் பரபரப்பு மூண்டதென்னவோ உண்மையில் தவிர்க்க முடியாததாகிவிட்டது.

இயல்பான அந்த கணங்களை அதன் போக்கிலேயே அனுமதித்துவிட்டு சற்று அமைதி ஏற்பட்டதும் முதல்வர் தன் பேச்சைத் தொடங்கினர்.

திருடுவது மட்டும் நோக்கமாக இருந்தால் கூட மன்னிக் கலாம். ஆளுல் நிரபராதியான பாபுவை திருட்டு வழக்சில் சிக்கவைக்க வேண்டுமென்கிற கெட்ட எண்ணத்திற்காகவே மூர்த்தி இந்தத் திருட்டை செய்திருக்கிருன். பிறகு பாபு வின்மீது அந்தப் பழி விழுவதற்கான காரியங்களில் முனை ந் திருக்கிருன். ஆகவே ஒரே சமயத்தில் திருட்டு, சதி ஆகிய இரு குற்றங்களை மூர்த்தி செய்தவனைன்.