பக்கம்:ஒரு மாணவன் மகாத்மாவாகிறான்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82


செய்தாள். புழக்கத்தில் பல வருஷம் இல்லாத அந்த அறையைப் பெருக்கி மெழுகி சுத்தம் செய்து வைக்க பாபுவின் அம்மா வேலைக்காரி கையில் சாவியைக் கொடுத்து

அனுப்பினுள்.

வேலைக்காரி நல்ல கெட்டிக்காரி. விட்டு நிலவரம் தெரிந்தவள். குப்பை கூளத்துக்கு மத்தியில், ஒரு பை நிறைய புத்தம் புதிய எவர் சில்வர் பாத்திரங்களைப் பார்த்த வளுக்கு நாக்கில் ஜலம் ஊறிற்று. அவுட் ஹவுசி லிருந்த அந்தப்பையை வேலிக்குப் பக்கத்தில் பத்திரப் படுத்தி வைத்து விட்டு மற்ற சாமான்களை எல்லாம் ஒழுங் காக வீட்டினுள் ஒப்பித்தாள். பிறகு நன்ருகப் பெருக்கி மெழுகி ரூமைப் பூட்டி சாவியை பாபுவின் அம்மாவிடம் கொடுத்தாள்.

பிறகு இருட்டிய பிறகு வேலைக்காரி வீட்டிற்குப் போகும் போது ஒசைப்படாமல் பையை மறைத்து எடுத்துச் சென்று விட்டாள்.

மறுநாள் பொழுது விடிந்ததும் பையைத் தன் வீட்டில் பானைக் கடியில் வைத்து விட்டு பாபுவின் வீட்டிற்கு வேலைக்கு வந்து விட்டாள்.

வேலைக்காரியின் புருஷன் ஒரு குடிகாரன். அன்றையக் குடிச் செலவுக்கு அவனிடம் காசில்லை. வீட்டில் தன் பெண் சாதி எங்காவது காசு ஒளித்து வைத்திருக்கிருளா என்று ஒவ்வொரு இடமாய்க் குடைந்து கொண்டிருந்தவன் கண் னில் பை நிறையப் பளிச்சிடும் எவர் சில்வர் சாமான் பட்டுவிட்டது.

அன்றையச் சாராயப் பிரச்னைக்கு அவனுக்கு வழி பிறந்து விட்டது. அடுக்கி வைத்திருந்த பிளேட்டுகளிலிருந்து