பக்கம்:ஒரு மாணவன் மகாத்மாவாகிறான்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85


பிறகு மெல்லிய குரலில் பாபு என்னைப் பார்த்து ஸார் ஒரு விண்ணப்பம் என்ருன்.

நான் அவனைக் கூர்ந்து நோக்கினேன்.

லார், இந்த ஹாஸ்டல் சாமான் திருட்டை நானே ஏற்றுக் கொள்கிறேன். இந்தக் காரியத்தை நான் செய்த தாகவே இருக்கட்டும். இதற்காகத் தாங்கள் மூர்த்திக்கு விதிக்கப் போகும் தண்டனையை எனக்கு அளியுங்கள். நான் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறேன். மனப்பூர்வமாகத் தான் இதை நான் சொல்கிறேன் என்ருன் குரல் தழுதழுக்க.”

நான், உனக் துப் பயித்தியம் பிடித்திருக்கிறதா பாபு?’’ என்று போலியாக ஒரு அதட்டு அதட்டினேன்.

உடனே பாபு, இல்லை சார் மூர்த்தியின் பிரசாரத்தில்ை என் மீது திருட்டுப் பட்டம் விழுந்து என்னை அந்தக் கண் ைேடு பார்க்கிறவர்களைப் பார்த்துப் பார்த்து நான் பழகி விட்டேன். ஆகவே எனக்குப் புதிய அவமானம் வந்து விடப் போவதில்லை. ஆல்ை மூர்த்தியின்நிலை அப்படி அல்ல. அவன் நல்லவன் என்று பல மாணவர்கள் நம்பிக்கை வைத்தி ருக்கிரு.ர்கள். அவர்களுடைய நம்பிக்கையைக் குலைக்கவேண் டாம் என்பதற்காகவே அந்தப் பழியை நிஜமாகவே ஏற்கச் சம்மதிக்கிறேன் என்ருன்.

பாபுவின் இந்த வார்த்தைகளைக் கேட்ட மூர்த்தி புழுப் போல் துடித்துப் போனன்.

அந்த நிலையில் தன்னைபாபு பரிகசிப்பான்; ஏளனமாகப் பார்ப்பான். நாளை கல்லூரியையே திரட்டிக் கொண்டு வந்து தன் மானத்தை வாங்கி விடுவான் என்றெல்லாம்தான் மூர்த்தி பாபுவைப் பற்றி எண்ணியிருந்தான். ஆனல் அவன்

62. Lorr.-b