பக்கம்:ஒரு மாணவன் மகாத்மாவாகிறான்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$8

கேட்க வருவதை சுப்பையா விரும்பவில்லை; அதை உடனே தடுக்கத்தான் அவன் என்னிடம் வந்து இப்படி ஒர் உபாய' செய்திருக்கிருன் என்று.

ஒ? சுப்பையா எவ்வளவு பெரிய மனுஷன்.

வாறு கூறினன்.

என் இனிய மாணவர்களே, நடந்து முடிந்துபோன விஷயங்களைப் பற்றித்தான் இப்போது நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். மூர்த்தியால் எழுந்த இந்த ஹாஸ்டல் தகராறில்ை பொதுவாக எனக்கு ஒர் உண்மை புலயிைற்று.

பிறப்பில் எல்லோரும் உயர்ந்தவர்களே என்பது மட்டு மல்ல; இயற்கையிலும் எல்லோரும் நல்லவர்களே சூழ்நிலை யும் சந்தர்ப்பமும்தான் மனிதனை அந்தந்தக்கால கட்டத் திற்கேற்ப நல்லவனாகவும் கெட்டவனுகவும் இன்னும் புரிந்து கொள்ளவேமுடியாத விசித்திரமானவளுகவும் எல்லாம் உருவாக்குகிறது. இதையே நான் உங்களிடமும் கண்டேன்.

சட்டென்று அணுக முடியாத விளாம்பழ இதயம் கொண்டவர்களையும் பளிங்கு மனமுள்ளவர்களையும் பனிக் கட்டி இதயம் படைத்தவர்களையும் பார்த்துப் பரவச மடைந்தேன்.

சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப அடுக்கடுக்கான தவறு களைச் சுயநலத்திற்காகச் செய்துகொண்டே சென்ற மூர்த்தி அதே சந்தர்ப்ப சூழ்நிலைகளின் இரும்புப் பிடிகளில் சிக்கித் தவிக்க நேர்ந்தபோது சரணடைந்துவிட்டான். இதைத் தவிர அவனுக்கு அப்போது வேறு வழி இல்லை என்று கொள்வதைவிட அவன் தனது தவறுகளுக்காக நெஞ்சுருகி