பக்கம்:ஒரு மாணவன் மகாத்மாவாகிறான்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 |

மேஜையைத் தட்டி அவர்களை அமைதிப்படுத்திய

முதல்வர் அன்பான மாணவர்களே, இந்த மாறுதலைத்தான் நான் உங்களிடம் என்றும் எதிர்பார்க்ேெறன்.

தெரிந்தே தவறு செய்தாலும், உன் சகோதர மனுஷ னின் தவறுகளை அன்போடு ஆராய்வாய். அதனிலும் அதிக அன்போடு, உன் சகோதரி மனுவியின் தவறுகளை ஆராய் வாய். நெறி பிறழ்வது மனித இயல்பே-என்னும் "பர்ன்ஸ் லின் பொன் னை வாக்கை என்றும் நினைவில் வைத் துக் கொள்ளுங்கள்.

இதற்கு மேலும் நான் ஏதாவது பேசிக்கொண்டு உங் களுக்கும் நீங்கள் ஆர்வத்தோடு வரவேற்கத் துடிக்கும் மூர்த்திக்கும் குறுக்கே நிற்க விரும்பவில்லை. இன்னும் சில கணங்களில் மூர்த்தி உங்கள் முன்னுல் வந்து நிற்பான். ஆளுல் நீங்கள் சற்று முன் அழைத்ததைப் போல் வெறும் நண்பர் மூர்த்தியாக மட்டும் இங்கு வரப்போவதில்லை. இது என்ன புதிர் என்று உங்களுக்குத் தோன்றுகிறதல்லவா? -

ஆம். இது ஒரு புதிர்தான். நீங்கள் எத்தனை முயன்ரு லும், இதனே உங்களால் ஊகிக்க முடியாது. முடிச்சை நானே அவிழ்க்கிறேன்.

-தன் மீது மூர்த்தி திருட்டுக் குற்றம் சாட்டியதற்காக, பாபு தன்னுடைய பதவியை ராஜினமாக் செய்தான் அல்லவா? அந்தப் பதவியை இப்போது ஏற்கக்கூட பாபு பிடி வாதமாக மறுத்து விட்டான். தன்னுடைய எந்தத் தொண் டையும் ஒரு குடையின் கீழ் நின்று செயலாற்றுவதில்லை என்று முடிவு செய்து விட்டாளும். ஆகவே தன்னை எந்தப் பதவியையும் ஏற்க அல்லது தன் தலையில் கட்ட வற் புறுத்த வேண்டாம் என்று என்னிடம் பிடிவாதமாக மறுத் தான்.