பக்கம்:ஒரு மாணவன் மகாத்மாவாகிறான்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92


பாபுவின் கோரிக்கைகளை எல்லாம் ஏற்றே பழக்கப்பட் டுப் போன எனக்கு,-ஏனெனில் அவை என்றும் நியாயமான வையாகவே இருக்கும் என்பதால்தான் இதையும் ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. அது மட்டுமல்ல.

தன்னுடைய செகரட்டரி போஸ்டை மூர்த்தியே மீண்டும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவனைப் பிடி வாதமாக வற்புறுத்தி மூர்த்தியைச் சம்மதிக்கவும் வைத்து விட்டான். அதற்கு மேலும் பாபுவின் விருப்பத்திற்கு நான் குறுக்கே நிற்கவிரும்பவில்லை. ஆனல், உங்களில் யாருக்கே னும், இந்த ஏகோபித்த முடிவில் ஆட்சேபணை இருந்தால் அதைத் தாராளமாகத் தயங்காமல் கூறலாம் என்று முதல் வர் கூறியதும் மறுகணம் செகரட்டரி மூர்த்தி வாழ்க; பொன் மனத் தியாகி பாபு வாழ்க; பெருமதிப்பிற்குரிய முதல்வர் வாழ்க’ என்று அந்தக் கட்டிடமே அதிரும் வண் ணம் எழுப்பிய கோஷமே அனைவருடைய சம்மதத்திற்கும் சாட்சியாக ஒலித்தன.

அதைத் தொடர்ந்து, இருகரம் கூப்பியபடி உள்ளே யிருந்து வெளியே வந்த மூர்த்தியைக் கண்டதும் மாணவர் களின் உணர்ச்சி அணை கடந்து விட்டது.

அத்தனை காலம் தாங்கள் பார்த்துப் பழகிய பழைய மூர்த்திக்குப் பதில் பாபுவால் புடம் போட்ட புதிய ஒரு மூர்த்தியைப் பார்க்க ஆவல் கொண்டவர்களைப்போல் அனைவரும் தங்கள் ஆசனத்தின் மீது ஏறி நின்று கொண்டு ஆரவாரம் செய்தனர்.

இந்தக் காட்சியைக் கண்ட பாபுவின் விழிக் கடை யிலே கண்ணிர் பூத்து நின்றது. அளவுக்கு மீறிய மகிழ்ச்சி யினால் கண்களில் நீர் நிரம்பி வழிகிற இன்ப உணர்ச்சியை அப்போது தான் பாபு தன் வாழ்க்கையில் முதல் தடவை