பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99 ஒரு வீட்டின் கதை வல்லிக்கண்ணன் அவனிடம் இருந்தது. அந்நாட்களில் கந்தகத் தீக்குச்சிதான் எங்கும் கிடைத்து வந்தது. பளிச்சிடும் சிகப்பு வர்ணத் தலைகளைக் கொண்ட லூவிபர் மேட்சஸ். அந்தக் குச்சிகளை அதற்குரிய மருந்து பூசிய, இப்பெட்டி ஓரங்களில் உரசித்தான் பற்றவைக்க வேண்டும் என்பதில்லை. தரையில், சுவர்மீது, கட்டைகளில் எங்கே உரசினாலும் நெருப்பு வெடிக்கும். தரைமீது போட்டு அழுத்தமாய்த் தேய்த்தாலும் தீ பற்றிக் கொள்ளும். குச்சியை உரசித் தேய்த்த இடத்தில் மஞ்சளாகக் கந்தகக் கறை படியும். சிறிது நேரம் கந்தக நெடியும் நிலவும். இந்த விதமான செந்தலைத் தீக்குச்சிகளின் காரணமாகத்தான், சிவப்புத் தொப்பி தரித்து வந்த போலீஸ்காரர்களை தீக்குச்சிகள் என்று குறிப்பிடுவதும் எழுதுவதும் வழக்கத்துக்கு வந்தது. வெயிலு இத் தீக்குச்சிகளை கண்டகண்ட இடத்திலெல்லாம் உரசி, குச்சியில் நெருப்பு வெடித்துச் சீறுவதை வேடிக்கை பார்த்துக் களிப்பதைப் பழக்கமாக்கியிருந்தான். இந்தப் பழக்கம் அவனோடு ஒட்டி வளர்ந்தது. அப்பா காலத்திலிருந்தே அந்த வீட்டில் வண்டியும் மாடுகளும் இருந்தன. சின்னப்பையனாக இருந்த போதே, தானே வண்டி ஓட்ட வேண்டும் என்று அவன் ஆசைப்பட்டான். 'இருப்புச் சட்டத்தில் வண்டிக்காரன் இருக்கிறபோதே, வெயிலு கோசுப் பெட்டி' மீது அமர்ந்து, கயிறுகளைக் கையில் பற்றிக் கொண்டு மாடுகளை முன்னேற விடுவதில் ஆர்வம் காட்டினான். வயது ஆகஆக, தானே தனியாக வண்டி ஒட்டிச் செல்லக் கூடிய சந்தர்ப்பங்களை அவன் உண்டாக்கிக் கொண்டான். வெயிலுக்கு படிப்பில் ஆர்வமும் ஈடுபாடும் இல்லை. இருந்தாலும், பள்ளிக்கூடம் போய்வந்தான். மகிழ்வண்ணபுரத்துப் பையன்கள் ஐந்தாறு மைலுக்கு அப்பால் இருந்த நகரத்துப் பள்ளிக் கூடத்துக்குப் போய்வந்தார்கள். ரயிலில் போய் வரவேண்டும். ரயில் நிலையம் ஊருக்கு மேற்கே இரண்டு மைல் தள்ளி இருந்தது. எட்டு மணிகு ஒரு ரயில் வண்டி. அதில் போனால்தான் பள்ளிக்கூடத்துக்கு நேரத்துக்குப் போய்ச் சேரலாம். ஆனால் அந்த வண்டி எட்டரை மணிக்குள்ளாக நகரை அடைந்துவிடும். பத்து மணி வரை பையன்கள் நகரச் சூழ்நிலையில் இஷ்டம்போல் சுற்றித்