பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105 ஒரு வீட்டின் கதை வல்லிக்கண்ணன் ஜோரான குதிரைவண்டி ஒன்று வைத்துக் கொண்டான் வெயிலு. வண்டி பார்ப்பதற்குப் பளபளவென்று அழகாக இருந்தது. குதிரை கம்பீரமாகக் காணப்பட்டது, வெளியூர் நாடகங்களுக்கு அவன் அந்த வண்டியிலேதான் போய் வந்தான். வீட்டில் அரிக்கன் லாந்தர் போதுமான வெளிச்சம் பரப்பவில்லை என்று சொல்லி, பெட்ரோமாக்ஸ் லைட்டுகளை வாங்கி எரிய விட்டான். எதுவுமே பளபளப்பாய், பிரகாசமாய், இருந்தால்தான் எனக்குப் பிடிக்கும்" என்று அவன் சொல்வது வழககம. ஆனால் அவன் மனைவி காந்திமதி டிம் அடிச்ச விளக்காக இருந்தாள். அவளிடம் அழகு அம்சங்கள் இல்லை; அவள் முகத்திலும் பிரகாசம் இல்லை. போதும் போதாததற்கு நோய்களின் வளர்ப்புப் பண்ணையாகவும் அவள் விளங்கினாள். அவளுடைய அறை ஒரு குட்டி ஆஸ்பத்திரியாக இருந்தது. தனக்குக் குழந்தை பிறக்கவில்லையே என்று காந்திமதி வருத்தப் பட்டுக் கொண்டிருந்தாள். குழந்தை எதுவும் பிறக்காதது நல்ல காலந்தான் என்று வெயிலு மகிழ்ந்து போனான். அவள் அவனை சந்தேகித்தாள். அவனது ஆரோக்கியத்தை யும் சந்தோஷத்தையும் கண்டு அவள் புகைந்தாள்; பொறாமைப் பட்டாள். முணுமுணுத்தாள். சண்டைபிடித்தாள். அதை எல்லாம் வெயிலு சட்டைபண்ணவேயில்லை. அவன் போக்கில் அவன் முன்னேறிக் கொண்டிருந்தான். ஸ்பெஷல் நாடகங்கள் நடத்துவதில் அவனுக்கு ஈடுபாடு ஏற்பட்டதே மிஸ் கிருஷ்ணவேணியின் நட்பையும் உறவையும் பெற்று அவற்றைப் பேணிவளர்க்க வேண்டும் என்ற அவனுடைய ஆசையினால்தான். அதில் அவன் வெற்றியும் கண்டான். ஆனால் பணம் நிறையவே அவன் கையைவிட்டுப் போயிற்று. அதைப் பற்றி வெயிலு கவலைப்படவேயில்லை. கிருஷ்ணவேணி அவனுடைய பிரிய சிநேகிதி ஆகிவிட்டாளே; அது எவ்வளவு பெரிய பாக்கியம்! அவளோடு அவன் அடிக்கடி குற்றாலத்துக்குப் போனான். இரண்டு மூன்று நாட்கள் அங்கேயே தங்கினான். அங்கே ஒரு சிறு பங்களாவை விலைக்கு வாங்கிவிட்டான்.