பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 ஒரு வீட்டின் கதை வல்லிக்கண்ணன் அவனுக்கு நாடகங்கள் நடத்துவதிலும். நடிகர்களை நிர்வகிப்பதிலும் நல்ல திறமை இல்லை. நாடகங்களில் அக்கறை காட்டுவதைவிட, நடிகை கிருஷ்ணவேணியிடம் அளவுக்கு அதிகமான அக்கறை காட்டிவந்தான். நாடகங்கள் பொருளாதார வெற்றியாக அமையவில்லை. சில மாதங்களிலேயே பல ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. வெயிலு மேலும் சில ஆயிரங்களை பறக்கவிட்டிருப்பான்தான். ஆனால் கிருஷ்ணவேணி அவன்மீது அனுதாபப்பட்டு, அவனைத் தடுத்து விட்டாள். "கொஞ்ச நாட்களுக்கு நாடகம் எதிலும் நடிக்காமலே இருக்கணும்னு எனக்கு ஆசையாயிருக்கு. நீங்க நாடகங்களுக்கு ஏற்பாடு பண்ன வேண்டாம்" என்று அவள் கேட்டுக் கொண்டாள். கிருஷ்ணவேணியின் விருப்பம் எதுவானாலும் அதை நிறைவேற்றச் சித்தமாக இருந்த வெயிலு அவளுடைய இந்த எண்ணத்துக்குத் தடையா சொல்லப் போகிறான்? குற்றாலம் பங்களா இருக்கவே செய்தது...வெயிலு மகிழ்வண்ணபுரத்தை மறந்து விட்டான் என்றே தோன்றியது. காந்திமதி அவனை மறக்கும்படி விட்டுவிடுவாளா? ஆள் மேல் ஆள் அனுப்பினாள். ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு வெயிலு வீடு திரும்பினான். கிருஷ்ணவேணியும் கூடவே வந்தாள். அவளை மாடியில் இருக்கும்படி உபசரித்து விட்டு, வெயிலு வீட்டுக்குள்ளே போனான். அவனைக் கண்டதுமே காந்திமதி லபோ லபோ என்று கத்த ஆரம்பித்தாள். வெறிபிடித்தவள் போல் கூச்சலிட்டாள். மரியாதை பார்க்கவில்லை அவள். நீரும் ஒரு மனுசன்னு வெள்ளையும் கள்ளையுமா அலையிதேரே! து, வெட்கமில்லை? கூத்தாடித் தேவ்டியா கொடுக்கைப் புடிச்சுக்கிட்டு அலையித உமக்கு வீடு வாசல், வண்டி மாடு, பொண்டாட்டி எல்லாம் என்னத்துக்கு?" என்று ஆரம்பித்து, அவள் பாட்டுக்குப் பொரிந்து கொட்டினாள். - 'ஏய். அநாவசியமா வாயாடாதே..." என்று வெயிலு வாய் திறக்கவும், அவளுடைய வெறி அதிகமாயிற்று. மேலும் உரத்துக் கத்தினாள். திடீரென்று, நீரு விளங்குவீரா? என் வயித்தெரிச்சலை கொட்டிக்கிட்டு நீரு வாழ்ந்திர முடியுமா? என்னை வயிறெரியப் பண்ணுகிற அந்தத் தேவ்டியாதான் நல்லாயிருப்பாளா?" என்று