பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107 ஒரு விட்டின் கதை வல்லிக்கண்ணன் தத்திக்கொண்டு, தன் நெஞ்சில் தானே மடார் மடாரென அறைந்தாள் காந்திமதி. 'இவளுக்குப் பைத்தியம்தான் புடிச்சிருக்கு என்று வெயிலு நினைத்தான். மரக்கட்டிலின் மீது அமர்ந்திருந்தவன் பார்வையில், அங்கே சன்னலில் சிறு விளக்கருகில் கிடந்த தீப்பெட்டி பட்டது. கந்தகத் தீப்பெட்டி. திப்பெட்டியை எங்கே எப்போது பார்த்தாலும் வெயிலுகந்தநாதனுள் உறையும் சிறு பிள்ளைத் தனம் தலையெடுத்துவிடும். பெட்டியை எடுத்து, ஒவ்வொரு குச்சியாக வெளியே இழுத்து, தரையில் கீச்சி, அதில் தீ சிறிவெடிப்பதை வேடிக்கை பார்ப்பான். இப்போதும் அப்படித்தான் செய்தான். ஒவ்வொரு குச்சியும் கட்டில் மீது உரசப்பட்டதும், சர்ரெனச் சீறி நெருப்பு கிளம்பியது. கந்தக நெடி பரவியது. அது அவனுக்கு மேலும் மேலும் ரசிக்கப்பட வேண்டிய ஒரு தமாஷாக அமைந்தது. அதிலேயே லயித்து விட்டான் வெயிலு. இவன் இடிச்சபுளி மாதிரி உட்கார்ந்திருந்தால் கூட காந்திமதி சகித்திருப்பாள். தன்னை அலட்சியப்படுத்தி விட்டு அவன் இப்படி ஒரு விளையாட்டில் மூழ்கிவிட்டால்? அவளுடைய ஆத்திரம் அதிகரித்தது. நான் என்ன மனுஷியா, வேறே என்னவுமா? நான் சொல்லிக்கிட்டே இருக்கேன், நீரு கவனிக்காம என்னமோ பண்ணுதிரே!” என்று கூச்சலிட்டபடி, காந்திமதி அவனை நெருங்கினாள். அவன் கையிலிருந்த தீப்பெட்டியை தட்டி விட்டாள். அது அவள் காலடியில் விழுந்தது. அவள் அடங்காத கோபத்தோடு அந்தப் பெட்டியை ஓங்கி மிதித்தாள். ஆத்திரமாகக் காலால் அதைத் தேய்த்து நசுக்கினாள். தீப்பெட்டியில் குச்சிகள் நிறையவே இருந்தன. கந்தகக் குச்சிகள். தரையோடு தேய்த் து நசுக்கப்பட்டதும் சூடுற்று அவை குப்பெனப் பற்றிக் கொண்டன. காளியாக மாறிக் கூத்தடித்த காந்திமதியின் சேலைத் தலைப்பு கீழே தொங்கிப் புரண்டு கொண்டிருந்தது. குச்சிகளில் வெடித்தெழுந்த தி சேலையை நக்கி வலுப்பெற்றுச் சிரித்தது. வேகமாக எவ்வியது. எரியும் தி தனக்கெனத் தனி விளையாட்டை ஆடிக் களிப்பதையே பார்த்துக் கொண்டிருந்தான் வெயிலு.