பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9   ✲   ராதை சிரித்தாள்

வல்லிக்கண்ணன்


அதைன்னு நல்லாத் தெரியுது' என்று நினைத்தான் சிவராமன்.

அவன் மறுபடியும் முன் அறையில் ஈஸிச் சேரில் சாய்ந்திருந்தபோது அவள் வந்தாள். 'என்ன நீங்க சோப்புப் போட்டுக் கிடவே யில்லை போலிருக்கே?' என்று விசாரித்தாள்.

'ஆமா. நான் சோப்பு உபயோகிக்கிறதேயில்லை' என்றான் அவன்.

'ஓ, சரிதான்!' என்று அவள் சொன்ன குரலில் எவ்வளவோ அர்த்தமிருந்தது. அவள் இதழ்களில் தனி நகை தவழ, அவனைப் பார்த்துவிட்டு உள்ளே போனாள். அந்தச் சிரிப்பு அவனுக்கு பழைய நினைவுகளையே திரும்ப இழுத்தது.

நான்கு வருடங்களுக்கு முன்பு நடந்ததுதான். எனினும் அதை அவன் என்றுமே மறந்துவிட மாட்டான். அவன் வாழ்க்கையிலேயே முக்கியமான சம்பவங்களில் அதுவும் ஒன்று. அதன் நினைவு அடிக்கடி அவன் மனதை உறுத்தும். அதனால்தான் அவன் ராதையைப் பார்க்க வருவதற்குக் கூடத் தயங்கினான்.

ராதைக்கு அப்போது கல்யாணமாகவில்லை. 'பெண்ணுக்கு வயசு வருதா, போகுதா! உடனோ டொத்த பெண்களுக் கெல்லாம் கல்யாணமாகி, பிள்ளையும் குட்டியுமாக் காட்சிதருதுக. ஆனா ராதாவுக்கு என்னமோ இன்னும் வேளை வரலே. அவ அப்பா அதைப்பற்றி கவலைப்படுவதாகவே தெரியலே' என்று அவள் தாய் அடிக்கடி புலம்பிக் கொண்டிருப்பாள்.

ராதைக்கு அப்போது வயது இருபதிருக்கும். காலத் தென்றலின் இனிய வருடுதலால் மலந்து நின்ற பூ வண்டின் வரவை நாடிக் காத்திருந்தது. வண்டுதான் வரவில்லை ! தேடுவாரற்ற இடத்திலே புஷ்பித்து வாடி வதங்கிய மலர் போலிருந்தாள் ராதை, அவள் கண்ட கனவுகளும், எண்ணி ஏங்கிய இன்ப நினைவுகளும் அவளுக்கு அளித்திருந்த சோடை கூட வரவரக் குறைந்து, அவள் முகத்தில் சோக முலாமே பூசின. அவள் கண்களில் ஒரு வெறுமை, தனிரக ஏக்கம் மிதந்தது.

'சிவகாமிக்கு பதினாலாவது வயதிலேயே கல்யாணமாகி விட்டது. என்னைவிட ஒன்றரை வயசு குறைந்த கல்யாணி இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகி விட்டாள். மேலத் தெரு ருக்குவுக்குக் கூடக் கல்யாணமாகி விட்டது. ஆனால்..' என்று கணக்கெடுத்துக்-