பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109 ஒரு வீட்டின் கை வல்லிக்கண்ணன் مريع வெயிலுவின் குதிரை வண்டி தயாராயிற்று. காந்திமதியை அதில் படுக்கவைத்து, கிருஷ்ணவேணியும் அருகமர்ந்தபடி, டவுனுக்கு எடுத்துச் சென்றார்கள். வெயிலுகந்தநாதன் ராலி சைக்கிளில் வேகமாய்ப் போனான். என்ன செய்தும் காந்திமதி பிழைக்கவில்லை. மூன்று நாட்களுக்குப் பிறகு அவள் உடல் ஒத்தை விட்டுக்கு எடுத்துவரப்பட்டது. அங்கிருந்து பிரேதம் மிகுந்த தடபுடலோடு சுடுகாட்டுக்குக் கொண்டு போகப்பட்டது. வெயிலு பதினாறு நாள் இழவை அமர்க்களமாகக் கொண்டாடினான். கிருஷ்ணவேணியும் அந்த வீட்டிலேயேதான் இருந்தாள். இழவு விசாரிக்க வந்துபோன ஊர்க்காரர்களும் உறவுமுறையினரும் உதிர்த்த பேச்சுக்களை அவனோ அவளோ பெரிதுபடுத்தவில்லை. "காந்திமதி போனது இவங்களுக்கு நல்லதாப் போச்சு. இந்த நாடகக்காரியே ஒத்த வீட்டின் சொந்தக்காரி ஆகிவிடுவா. அவளை அவன் கல்யாணம் பண்ணினாலும் பண்ணிக்கிடுவான்" என்று பலரும் சொன்னார்கள். இந்த ரகமான பேச்சுக்கள் அவ்விருவர் காதுகளிலும் விழத்தான் செய்தன. காந்திமதியின் கருமாதி விசேஷம் எல்லாம் முடிந்த மறுநாள். கிருஷ்ணவேணி பொலிவிழந்து காணப்பட்டாள். அவள் முகத்திலே சதா விளையாடிக் கொண்டிருக்கக் கூடிய சிரிப்பைக் கானோம். "என்ன கிருஷ்ணா, ஒரு மாதிரி இருக்கியே? என்ன விஷயம்?" என்று வெயிலு கேட்டான். அவள் அவன் முகத்தை கூர்ந்து நோக்கினாள். நீங்கதான் அவளுக்குத் தி வச்சேளா?" என்று கேட்டாள். - "சேச்சே! அவ தனக்குத்தானே கொள்ளி வச்சுக்கிட்டா!" என்று வறண்ட குரலில் வெயிலு சொன்னான். லேசாகச் சிரித்தான். தி எப்படி புடிச்சுதுன்னு நான்தான் அன்னைக்கே சொன்னேனே!" "நீங்க ஏன் அணைக்கலே? ஏன் வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்திங்க? அவ தொலையட்டும்கிற கெட்ட நெனைப்புதானே காரணம்?" அவள் இப்படி எல்லாம் ஏன் குறுக்கு விசாரணை