பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:tt ஒரு வீட்டின் கதை வல்லிக்கண்ணன் -.-. گمان பண்ணுகிறாள் என்று திகைத்தான். "உனக்கு இன்னிக்கு என்ன வந்துது கிருஷ்ணா ஏன் இப்படி..?" அவள் எதையோ மோப்பம் பிடிப்பது போல், மூக்கைச் களித்து, ஹம்ைப்.ஹகம்ப்' என்று சுவாசித்தாள். உங்களுக்குத் தெரியுதா? துணி கருகி எரிகிற வாசம்? சதை தீய்கிற நாத்தம்?" என்று கேட்டாள். "அவ வந்திருக்கா. நேற்று ராத்திரி வந்தா. அவரு என்னை கொன்னு போட்டாரு. உன்னாலேதான். பாதகத்தி நீ எனக்கு எமனா வந்து சேர்ந்தேயின்னு சொன்னா. சிலை பத்தி எரிய, தியிலே குளிச்சுக்கிட்டு, அவ என்னைப் பார்த்த பார்வை. அடியம்மா. இப்போ நினைச்சாலும் பயமாயிருக்கு." அவள் தேகம் பயத்தால் நடுங்குவதுபோல் குலுங்கியது. அவள் ஒரு திக்கையே வெறித்துப் பார்த்தாள். "கிருஷ்ணா, கிருஷ்ணா! இங்கே பாரு.. அங்கே என்னத்தை அப்படிப் பார்க்கிறே?" என்று அவளைப் பிடித்து உலுக்கினான் "அவ வந்து நிக்கிறா. தீப்புடிச்சு எரியிற நாத்தம் தெரியலே?" - "அதுல்லாம் ஒண்ணுமில்லே, கிருஷ்ணா. உன் நெணைப்பு தான். காந்தி தீப் பத்தி அலறிக்கிட்டு நின்னதை நீ பார்த்ததேயில்லே. அது உன் மனசுக்குள்ளேயே பதிஞ்சிருக்கு. அந்த நெனைப்பிலே..." அவள் குறுக்கிட்டாள்: "அவ பேயா வந்திருக்கா. இந்த வீட்டைச் சுத்திச் சுத்தி வாறா..." இவளிடம் பேசிப் பிரயோசன மில்லை என்று வெயிலு கம்மா இருந்து விட்டான். ஆனாலும், கிருஷ்ணவேணி கம்மா இருக்கவில்லை. சில நாட்கள் குறுகுறு என்று உட்கார்ந்து விடுவாள். 'இந்த வீட்டிலே ஏதோ கோளாறு இருக்கு. முன்னாலே சூடிக்கு ஒரு மாதிரி வந்துக்கிட்டிருந்துது. அப்புறம் காந்திமதி வெறிபுடிச்சுக் கத்திக்கிட்டு அமைதியை குலைச்சா. இப்போ இவளுக்கும் ஏதோ சனியன் புடிச்சிட்டுது. இந்த வீட்டுக்கும் பொம்பிளைகளுக்கும் ராசி இல்லே போலிருக்கு ' என வெயிலுகந்தநாதன் எண்ணலானான். கிருஷ்ணவேணியின் மனக்குரங்கு எப்படி எப்படியோ தாவிக்