பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 ஒரு வீட்டின் கதை வல்லிக்கண்ணன் r பதைப்பு. "யாரது?...ஏய் கிருஷ்ணா.கிருஷ்ணா" என்று கத்தினான். ழந்து உட்கார்ந்து, தலையணை அருகிலிருந்த பாட்டரி கட்டை எடுத்து, ஒளி உண்டாக்கினான். கிருஷ்ணவேணி அடுக்கையில் உருண்டு வளைந்து நெளிந்தபடி அலறிக்கொண்டு கிடந்தாள். சனியன்! என்னமாக் கத்துது, பேய் மாதிரி என்று அவன் மனம் பேசியது. பேய் என்றதும் அவள் சொன்னதெல்லாம் நினைவு வந்தது. அவன் அவளை வேகமாக உலுக்கினான். "எந்திரி.கிருஷ்ணா. முழிச்சுக்கோ. எந்திரி கிருஷ்ணா" என்று மந்திரம் உச்சரிப்பது போல் சொல்லிக் கொண்டேயிருந்தான். ஒரு மட்டும், கிருஷ்ணவேணி விழிப்படைந்தாள். எழுந்து உட்கார்ந்தாள். மிரள மிரள நோக்கினாள். அவன் "என்ன கிருஷ்ணா, ஏணிப்படிக் கத்தினே?" என்று கேட்டதற்குப் பதில் பேசாமல் குறுகுறுவென்று உட்கார்ந்திருந்தாள். "சொப்பனம் ஏதாவது கண்டியா?" 'உம்ம்" என்றாள். பிறகு சொப்பனமாத்தான் இருக்கும்" என்று முனகினாள். அப்போது சுவர்க்கடியாரம் ஒரு மணி அடித்தது. "இப்ப மணி என்ன, ஒண்னா?" அவன் பேட்டரி வெளிச்சத்தைக் கடியாரத்தின் மேல் திருப்பினான். மணி பன்னிரண்டரை. "பன்னிரண்டரையா? நடுச்சாமமா? அப்போ அது சொப்பனமா இருக்காது" என்றாள் அவள். "பின்னே என்னவாம்? பேயா?" அர்த்தம் பொதிந்த பார்வையை அவன் முகத்தில் நிறுத்தினாள் கிருஷ்ணா. நாசமாப் போச்சு போ!' என்றது. வெயிலுவின் மனம். அவன் எழுந்து, அரிக்கன் லாந்தரை ஏற்றினான். "இன்னமே து.ாக்கமாவது மண்ணாவது சிவராத்திரிதான்" என்றான். வெளிச்சம் அவளுக்கு நல்ல விழிப்பு தந்தது. விழிப்பு மெது மெதுவாக தைரியம் அளித்தது. அவள் நெடுமூச்சுயிர்த்து, நிமிர்ந்து உடகார்ந்தாள். "சீ இப்படியும் உண்டுமா? நல்லாப் பயந்தேன் போ. ஆனா,