பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 ஒரு வீட்டின் கதை வல்லிக்கண்ணன் எட்டு வானம் இர்குண்டு வருது மேகம் திர்ரண்டு வருது! வெள்ளம் புர்ரண்டு வருது பொண்ணு மிர்ரண்டு ஓடுது! இப்படி ஒரு பாட்டு ஒத்தை வீட்டிலிருந்து சத்தமாக ஒலிக்கலாயிற்று. அடிக்கடி ஒலமாக எழுந்தது. வேளை கெட்ட வேளைகளில் எல்லாம் கரகரத்து ஒலித்தது. இது கேட்கத் தொடங்கியதுமே, "சரி, வெயிலு மூக்கு முட்டக் குடிச்சிட்டான்!" என்று ஊர்க்காரர்கள் புரிந்து கொள்வார்கள். கால ஓட்டம் வெயிலுவின் வாழ்க்கையிலும் அநேக மாறுதல்களை சேர்ப்பித்தது. கிருஷ்ணவேணி அவனை விட்டுப் பிரிந்து போனதிலிருந்து அவன் ஆளே மாறிப்போனான் என்பது அனைவருக்கும் புலனாயிற்று. மனைவி காந்திமதி இறந்துவிட்டது கூட அவனை அவ்வளவுக்கு பாதித்ததில்லை. கிருஷ்ணா இப்படி, போவான்னு நான் நினைக்கவேயில்லையே! நான்தான் காந்தியின் சாவுக்குக் காரணம்னு அவ எண்ணிப்போட்டா. அதனாலே என் கூட இருக்கிறதுக்கே அவளுக்கு விருப்பமில்லை என்று வெயிலு திரும்பத் திரும்ப எண்ணிக் குமைந்தான். அதனால் அவனுக்கு 'மனசே சரியில்லாமப் போயிட்டுது என்கிற கோளாறு பிடித்தது! ஒரு மாறுதலுக்காக அவன் குடிக்க ஆரம்பித்தான். ஊரின் மற்றொரு மூலையில் இருந்தது '1-ம் நிர் சாராயக் கடை. அதிலிருந்து மருந்து வாங்கி வருவதற்கென்று ஒரு ஆளை நியமித்தான். அவனே சமையல்காரனாகவும் செயல்பட்டான். சாராயத்துக்குப் பக்கமேளமாக கரம் மசாலா சேர்த்த மொச்சைக் கொட்டை சுண்டல் தயாரிப்பதில் அவன் தேர்ந்த நிபுணனாக விளங்கினான். மெதுமெதுவாக இந்தக் குடிக்கு தனிச்சுவையும் அதிகமான விறுவிறுப்பும் அளிக்கக் கூடியவை மாமிச பதார்த்தங்கள்தான் என்று கூறி, ருசிகரமாகத் தயாரித்துக் கொடுத்து, வெயிலுக்கு அந்த ரக உணவு வகைகளில் ஈடுபாடு பிறக்கும்படி செய்தான். சுத்த சைவர்கள் வாழ்ந்த மகிழ்வண்ணபுரத்தில், ஒத்தை வீட்டில்தான் முதன்முதலாக