பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 ஒரு வீட்டின் கதை வல்லிக்கண்ணன் நீங்களும் புதுக்கணக்கு போட்டுக்கிட வேண்டியதுதான். உங்க இனத்திலேயே நல்ல இடமாப் பார்த்து, ஏழை எளியதா யிருந்தாலும் குணமுள்ள நல்ல பெண்ணாப் பார்த்து, கல்யாணம் பண்ணிக்கிடுங்க. உங்க குலம் விளங்குறதுக்கு உங்களுக்கு பிள்ளை குட்டிக வேணுமில்லா? சிக்கிரமா ஒரு கல்யாணத்தைப் பண்ணுங்க. அப்பதான் நீங்க நல்லபடியா வாழமுடியும்" என்று அவள் உபதேசம் புரிந்தாள். வெயிலு உரக்கச் சிரித்தான். "உபதேசம் பண்றியா உபதேசம்!" என்று வார்த்தைகளைக் கடித்துத் துப்புவதுபோல் உச்சரித்துவிட்டு, திரும்பிப் பாராமலே நடந்தான். ஊருக்குத் திரும்பி வரும்போதே, ஃபுல் லோடிலே தான் வந்தான். - 'ஏய்-மேகம் திர்ரண்டு வர்ருது! வெள்ளம் புர்ரண்டு வர்ருது! உலகம் உர்ருண்டு வர்ருது! எஹ்ஹெஹே.உருண்டு வருது!" என்று கத்திக்கொண்டு தட்டுத் தடுமாறி நடந்தான். வீட்டுக்குள் போய் மீண்டும் குடித்தான். குடித்துக் கொண்டேயிருந்தான். வெயிலுகந்தநாதன் படுத்த படுக்கையானான். சாராயத்தையே மருந்து-மருந்து என்று குடித்தான். தன்னைத்தானே அழித்துக்கொள்ள ஆசைப்படுவது போல் அவன் செயல் புரிந்தான். அதில் அவன் வெற்றியும் பெற்றான். ஒன்பது மகிழ்வண்ணபுரத்தில் ஒதுங்கியிருந்த ஒத்தை வீடு சில வருடங்களாய்ப் பூட்டியே கிடந்தது. அதில் வசிப்பதற்கு யாரும் இல்லை என்பது போக, அந்தப் பெரிய வீட்டில் பேய் இருக்கிறது என்ற பேச்சுப் பரவியதும் அதற்கு ஒரு காரணம் ஆகும். திட்டமிட்டுச் செய்யப்படுகிற சில காரியங்கள் உரிய முறையில் பலன் தராமல்-எதற்காக எப்படி அவை பயன்பட வேண்டுமோ அப்படிப் பயன்படாமல்-துவக்கி வைத்தவரின்