பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 ஒரு வீட்டின் கதை வல்லிக்கண்ணன் எங்களுக்கு என்றார்கள். சித்தப்பாவுக்கு ஒரே மகன். அவனுக்குப் பல பிள்ளைகள். சித்தப்பா மகன் "எனக்கு எனக்குச் சேரவேண்டும்!" என்று உரிமைக்குரல் எழுப்பினான். ஊர் பெரியவர்கள் சமரசம் பண்ண முன்வந்தார்கள். சம்பந்தப் பட்டவர்களுக்குள் சமரசம் ஏற்படுவதாயில்லை. சித்தப்பா மகன் சிவகுருநாதன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தான். கேஸ் நடந்து கொண்டிருந்தது. அந்த வீடு பாழடைந்ததுபோல் தோற்றம் காட்டி மூடியே கிடந்தது. பத்து வெயிலு காலத்தில் சர்வ சாதாரணமாக இருந்து வந்த கந்தகத் தீக்குச்சிகள்-லூஸிபர் மேச்சஸ்-இல்லாமலே போயின. அவற்றினால் ஆபத்துக்கள் அடிக்கடியும் அதிகமாகவும் நிகழ்ந்து கொண்டிருந்தன என்பதால், தீமை பயக்காத லேப்டி மேச்சஸ்' வந்தன. . குத்துவிளக்குகளும் அரிக்கன் லாந்தர்களும் கூடப் பின்னுக்குத் தள்ளுண்டன. தெருக்களில் கல் கம்பங்கள் மீது ஏற்றி வைக்கப்பட்ட லாந்தர்களும், முக்கிய இடங்களில் கம்பங்களில் தொங்கிப் பிரகாச ஒளி சிதறிய கியாஸ் லைட்டுகளும் மறைந்து போயின. எலெக்ட்ரிக் விளக்குகள் வந்து சேர்ந்தன. ஊமத்தம்பூப் போன்ற பெரிய குழாயைக் கொண்டிருந்த கிராமபோன் பெட்டிகள் நாகரிகமற்றனவாகி, குழாயில்லாத சதுரப்பெட்டிகள் இடம் பெற்றுக் கொண்டிருந்தன. கிராப்புத் தலைகள் சர்வசகஜமாக எங்கும் தென்பட்டன. மகிழ்வண்ணபுரமும் கால ஓட்டத்தில் ஏற்பட்ட சுழிப்புகளை பிரதிபலிக்காமலில்லை. எனினும், ஊரிலும் ஊரார் வாழ்க்கை முறையிலும் பிரமாதமான மாற்றங்கள் ஏற்பட்டதாகத் தோன்ற வில்லை. ஊராரின் வாழ்க்கை நியதிகள் எப்போதும் போல் மந்தகதியிலேயே அமைந்து கிடந்தன. நாட்டு நடப்புகள் அவர்களின் வாழ்வைப் பெரிதும் பாதித்துவிடவில்லை. சாதாரணர்களின்-சராசரிகளின்-போக்குகளும் வாழ்க்கை நியதிகளும் எவ்விதத் தாக்கங்களினாலும் தீவிர மாறுதல்களைப்