பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 ஒரு விட்டின் கதை வல்லிக்கண்ணன் வைக்கோல் போரின் மேல் குதித்தார்கள். உயரத்திலிருந்து படப்பு மீது தொபுக்கடீர் என்று குதிப்பது ரொம்பவும் உற்சாகமான விளையாட்டாக அமைந்தது. அவ்விதம் பையன்கள் குதித்து விளையாடிக் கொண்டிருந்த போது, ஒருவன் குறி தவறி, படப்பு மீது பாய்வதற்குப் பதில் விலகித் தரை மேலே வந்து விழுந்தான். பலத்த அடி. அவனால் எழுந்திருக்க இயலவில்லை. முதுகெலும்பில் அடிபட்டிருக்கும் என்று மற்றவர்கள் சொன்னார்கள். கையைத் தூக்கமுடியாமலும் மடக்க முடியாமலும் கஷ்டப்பட்டான் பையன். எலும்பு பிசகியிருக்கும் என்று சிலர் சொன்னார்கள். பையனை வண்டியில் போட்டுக் கொண்டு சிறுகுளம் சிவலிங்க நாடாரை தேடிப் போனார்கள். எலும்பு முறிவு முதலிய கோளாறுகளை கவனித்து, சரிபண்ணி, மட்டை வைத்துக் கட்டி சீர்படுத்துவதில் மிகுந்த கெட்டிக்காரர் என்று பெயர் எடுத்திருந்தார் அந்த நாடார். பையனை வண்டியில் போட்டு எடுத்துச் சென்றதும், ஊரில் பலரும் பலவிதமாகக் கருத்து தெரிவித்தார்கள். இது ஆக்கங் கெட்ட வீடு. இங்கே இருக்க வாரவங்களை படாதபாடு படுத்தி விடும். ரொம்பவும் கொணக்கி முடக்கும். இதுவரை நடந்தது நமக்குத் தெரியாதா என்ன?" என்றார்கள். நாடார் பையனுக்கு வேண்டிய சிகிச்சை செய்து அனுப்பி வைத்தார். ஆறு ஏழு மாதங்களாச்சு பையன் சுகப்படுவதற்கு. செலவும், அலைச்சலும், மனக்கஷ்டமும் பெரியவர்களுக்கு. அதன் பாதிப்பு சிவகுருநாதன் பேச்சிலும் தெரியலாயிற்று. இது ராசி இல்லாத வீடு...தரித்திரம் புடிச்ச வீடு. இங்கே வந்ததிலேயிருந்து நமக்கு கஷ்டத்துக்கு மேலே கஷ்டம்தான். பணநஷ்டம் வேறே. கடன் ஏறிக்கிட்டே போகுது" என்று அவன் புலம்பலானான். எங்களுக்குத் தெரியும். அதனாலேதான் நாங்க அந்த வீட்டிலே வசிக்க விரும்பலே" என்று வெயிலுவின் பெரியப்பா மக்கள் இப்போது பெருமையாகப் பேசினார்கள். அந்த நாட்களில் ஜனங்கள் அதிகமாக போட்டோ எடுத்துக் கொள்ள ஆசைப்படவில்லை. போட்டோ பிடிக்கிற வசதிகளும் வாய்ப்புகளும் அக்காலத்தில் மிகவும் குறைவு என்பது இதற்குக்