பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121 ஒரு வீட்டின் கதை வல்லிக்கண்ணன் காரணமில்லை. போட்டோ பிடித்துக் கொண்டால், ஆயுசு குறைந்து போய் விடும் என்று ஜனங்கள் நம்பினார்கள். படம் எடுத்துக் கொள்ள ஆசைப் பட்டவர்களைக் கூட அநேகர் இந்த எண்ணத்தைச் சொல்லி மிரட்டினார்கள். இருந்தபோதிலும், தங்களையும் தங்களுக்கு வேண்டியவர் களையும் போட்டோ எடுத்து, அந்தப் படங்களுக்குக் கண்ணாடியும் சட்டமுமிட்டு, சுவரில் மாட்டி வைக்கிற மோகம் கொஞ்சம் கொஞ்சமாக வேரூன்றி வளர்ந்தது. மகிழ்வண்ண புரத்திலும் அது சிவகுருநாதன் மூலம் தலைகாட்டியது. அவன் தன்னையும் தன் மனைவியையும் பெரிதாகப் படம் பிடித்து, ஒத்தை வீட்டின் முக்கிய அறையில் எடுப்பான இடத்திலே தொங்கவிட்டான். மனிதர்களைப் படம்பிடித்து மிஷின் மூலம் படங்களுக்கு உயிர் கொடுத்து திரையிலே ஆட வைக்கிற அதிசய வேலை 'பயாஸ்கோப் என்ற பெயரில் சிலசில நகரங்களில் தோன்றியது. ஐனங்கள் இந்த அதிசயத்தைப் பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு போனார்கள். கிராமங்களிலிருந்து ஜனங்களை ஈர்க்கும் சக்தி நகரங்களுக்கு அதிகரித்துக் கொண்டே போயிற்று. ஏதாவது காரணத்தைக் கூறி அநேகர் நகரங்களை நோக்கிப் போனார்கள். "நாமும் டவுணிலேயே ஒரு வீடு பார்த்துக் கொஞ்ச நாள் தங்கியிருக்கலாமே? புள்ளைகள் படிக்கிறதுக்கு வசதியாக இருக்கும்" என்று திருமதி சிவகுருநாதனான அன்னம்மாள் ஓயாது அரித்துக்கொண்டே இருந்தாள். பிள்ளைகளும் பிச்சுப் பிடுங்கினார்கள். சிவகுருநாதனுக்கும் சபலம் தட்டியது. எனவே, ஒரு நல்ல நாள் பார்த்து, அந்தக் குடும்பம் டவுனுக்குக் குடியேறியது. டவுணில் அப்போது வீடுகள் வாடகைக்கு சுலபமாகக் கிடைத்தன; வாடகை குறைவாகவும் இருந்தது. கிராமத்தில் சும்மா வீட்டைப் பெருக்கி மெழுகி, விளக்கேற்றி வைத்துக் கொண்டிருக்க யாராவது கிடைத்தால் போதும்; அவர்கள் வாடகை என்று ஏதாவது கொடுத்தால் அது லாபம்; வீட்டை வாடகைக்கு விட்டுத்தான் ஆகனும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை என்ற நிலை இருந்தது. கிராமம் என்ற நிலையிலிருந்து சிறிது உயர்ந்துள்ள, ஆயினும் ஒரு நகரத்தின் தன்மைகளைப்