பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 ஒரு வீட்டின் கை வல்லிக்கண்ணன் பெற்றிராத, இரண்டும் கெட்டான் ஊரான மகிழ்வண்ணபுரத்தில் வீடுகளில் வாடகை கொடுத்து குடியிருப்பதற்கு ஆட்கள் கிடைப்பது அரிதாக இருந்தது. அப்படியாப்பட்ட காலம் அது. என்றாலும், தெரிந்தவர்களிடமெல்லாம் சொல்லி வைத்தும், தானே தேடியும், முடிவாக ஒரு ஆளைக் கண்டுபிடித்தான் சிவகுருநாதன். - நம்பகமான அந்தப் புள்ளிக்கு வீட்டை வாடகைக்கு விட்டு விட்டு சிவகுருநாதனும் டவுனுக்குப் போய்ச் சேர்ந்தான். நகரத்தில் ஒரு பலசரக்குக் கடை நடத்தும் திட்டத்தோடு, பதினொன்று நாடு நெடுகிலும் பெரும் விழிப்பு ஏற்பட்டிருந்தது. சுதந்திர தாகம் மக்கள்ை பலவிதமான செயல்களில் ஈடுபடுத்தியிருந்தது. அரசியல் பிரசாரக் கூட்டங்கள், ஜவுளிக்கடை மறியல்கள், கள்ளுக்கடை பகிஷ்கரிப்பு என்ற பரபரப்பான செயல்கள் எல்லா ஊர்களிலும் நிகழ்ந்து கொண்டிருந்தன. செயல்புரிய முடியாதவர்கள் தேசியத் தலைவர்களின் படங்களை வாங்கித் தங்கள் வீட்டுச் சுவர்களில் தொங்கவிடுவதன் வாயிலாகத் தங்களுடைய நாட்டுப்பற்றைக் காட்ட முன் வந்தார்கள். மகாத்மா காந்தி, பண்டிட் மோதிலால் நேரு, மதன்மோகன் மாளவிய போன்ற தலைவர்களின் உருவப் படங்கள் மகிழ்வண்ணபுரத்தின் ஒத்தை வீட்டுச் சுவர்களில் இடம் பெற்றன. சட்டசபையில் வெடிகுண்டு வீசி நாட்டைக் குலுக்கி - அந்நிய ஆட்சியாளருக்கு அதிர்ச்சி தந்து-துக்குமேடை ஏறிய வீரர்களான பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோரின் படங்கள், விதம் விதமானவைகூட, அங்கு இடம் பெற்றன. பறி கொடுத்தோமே-பண்டித மோதிலால் நேருவைப் பறி கொடுத்தோமே! என்ற பாட்டை ஓட்டல்களிலும் கடைகளிலும் உள்ள கிராமபோன்கள் மட்டுமின்றி, ஒத்தை வீட்டிலிருந்த கிராம போனும் அடிக்கடி ஓலமிட்டது. இரவு பத்து மணிக்குக்கூட அழுவதை வழக்கமாகக் கொண்டுவிட்டது அந்த வீட்டின் இசைப்பெட்டி.