பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 ஒரு வீட்டின் கதை வல்லிக்கண்ணன் பர்வதம் திண்ணையில் படுத்துக்கிடந்தாள். தன்னை மறந்து தூங்கி விட்டாள். எவ்வளவு நேரம் சென்றிருக்குமோ தெரியாது அவளுக்கு விழிப்பு தட்டியது. உணர்வுகளின் கிளுகிளுப்பு காரணமாக, அவள் கழுத்தில் விரல்கள் மெதுவாக ஊர்ந்தன. கிச்சுகிச்சு காட்டுவதாக, தூக்கக்கிறக்கத்தில் அவள் எண்ணிக் கொண்டாள். அவள் உள்ளத்தில் இன்ப நாடகம் கனவு ரேகையாக நெளிந்தது போலும், பாண்டியன்பிள்ளை விளையாடுகிறார் என்று நினைத்தாள். குகுகுங் என்று சிணுங்கிச் சிரித்து, "சும்மா இருங்க. இப்ப இது என்ன இது" என்று செல்லமாகக் குழறினாள். வெடுக்கென்று கழுத்தில் சங்கிலியைப் பற்றி இழுத்த உணர்வு அவளை உலுக்கியது. கை கழுத்தின் பக்கம் சென்றது. தடவியது. வெறும் கழுத்து. அங்கே உறவாடிக் கிடந்த தாலிச் சங்கிலி இல்லாமல் போயிருந்தது. - "ஐயோ மதிமயங்கிப் போனேனே! திருடன்லா என் முத்திலே கை வச்சிருந்திருக்கான். நான் அவுகளாக்கும்னு நினைச்சேனே. என் புத்தியை செருப்பாலடிக்க.." என்று புலம்ப ஆரம்பித்தாள் பர்வதம். என்ன பிரபலாபித்து என்ன பண்ண? போனது போனது தான். பர்வதத்துக்கு ஒத்தை வீடு பிடிக்காமல் போய்விட்டது. "சவம், இது என்ன வீடு? பந்தோபஸ்துக் குறைச்சல். அந்தப் பக்கம் ஆள் இறங்கி வந்து பதுங்கி இருக்க இடமிருக்கு முன் பக்கமானா திருட்டுப் பய வந்து களவாடிக்கிட்டுப் போக முடியுது. பாதுகாப்பே இல்லையே!" என்று விமர்சித்தாள் அவள். அனுபவ ஞானம் உதிர்த்த கருத்துக்களுக்கு பாண்டியன்பிள்ளை செவி சாய்த்தார். பதின்மூன்று நாடு சுதந்திரம் பெற்ற பிறகு நெடுகிலும் பலப்பல மாறுதல்கள் ஏற்பட்டுக் கொண்டிருந்தன. - ஒவ்வொரு நகரமும் பேய் வளர்த்தி பெற்று வந்தது. சி கிராமங்களும் புதுத்தோற்றம் கண்டன. அந்நிலையிலே கூடப் பல ஊர்கள் பழைய கறுப்பனே கறுப்பன் என்ற தன்மையிலேயே இருந்து வந்தன. அப்படிப்பட்ட ஊர்களில் மகிழ்வண்ணபுரமும்