பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129 ஒரு வீட்டின் கதை வல்லிக்கண்ணன் ஒன்று. மூலை முடுக்குகளில் உள்ள சின்னஞ்சிறு ஊர்களுக் கெல்லாம் பஸ் போக்குவரத்து ஏற்பட்டு விட்டது. அந்த வசதி இந்த ஊருக்கும் கிடைத்தது. இந்த ஊருக்கும் மின்விளக்கு வசதி கிட்டியது. தெருத் தண்ணிர்க்குழாய்கள் வந்தன. பொது ரேடியோ அலறியதோடு, சில சில வீடுகளிலும் ரேடியோவின் குரல் ஓயாது கேட்கலாயிற்று. இவ்வூர்க்காரர்களும் பக்கத்து ஊர்களுக்கு போய் சினிமா பார்த்துவிட்டு, படங்களைப் பற்றியே பேசி மகிழ்ந்தார்கள். சிலர் தினப்பத்திரிகைகள் படித்துவிட்டு அரசியல் பேசினார்கள். அப்புறம் அவரவர் இயல்புகளின்படி சோம்பியிருந்தார்கள். அதில் எல்லாம் குறை ஒன்றுமில்லை. ஆயினும், மொத்தத்தில் ஊர் சோபிக்கவில்லை. பிறவிப் பெருமாள்பிள்ளை காலத்தில் அழுது வடிந்தது போல் தான் இப்பவும் தோற்றம் காட்டியது. பெரிய பிள்ளை காலத்தில் மகிழ்வண்ணபுரத்தில் 'பிள்ளைமார் வீடுகள் எண்பது செயலாக இருந்தன என்று அவர்கள் பெருமைப்பட்டுக் கொண்டார்களே, அது தேய்ந்து போயிருந்தது. குறைந்து குறைந்து, இப்போது இருபது வீடுகளுக்குக் குறுகி விட்டது. படிக்க வேண்டியதில்லை, இன்னொருத்தன் கிட்டே கைகட்டிச் சேவகம் பண்ன வேண்டியதில்லை என்று அந்தக் காலத்தில் நிலவிய மத்தியதர-மேல் மத்தியதரப் பிள்ளைமார் குடும்ப மனோபாவம் கால ஓட்டத்தில் கரைந்து போயிருந்தது. எங்காவது, எதாவது வேலை பார்த்துத்தான் பிழைக்க வேண்டும் என்ற அவசியம் சிறிது சிறிதாகச் சிலரை அவ்வப்போது வெறியேறச் செய்திருந்தது; நகரங்களுக்குப் போய் பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்று சில குடும்பங்களைக் குடிபெயர வைத்திருந்தது. தொழில் வாய்ப்புகள் உள்ள அண்டை அயல் ஊர்கள் சில வருடங்களுக்குள்ளாக நன்கு வளர்ந்து டவுண்வழிப் என்ற அந்தஸ்தைப் பெற்றிருந்தன. அந்த ஊர்களில் நெருக்கடி ஏற்பட்டதால், வீடு தேடி அநேகர் மகிழ்வண்ணபுரத்துக்கும் வந்தார்கள். அதனால் இந்த ஊர் வீடுகளின் வாடகை மதிப்பும் உயர்ந்தது. ஒரு 9