பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133 ஒரு வீட்டின் கதை வல்லிக்கண்ணன் அழகான ஊர், அருமையான வீடு"என்று ஆல்பர்ட் பேராசிரியர் சிவசிதம்பரத்திடம் கூறினான். அவர் இவனுக்கு நண்பர். பல வருடங்களாகக் கடிதத் தொடர்பில் வளர்ந்த நட்பு அது. "இந்த ஊரை எனக்கு ரொம்பவும் பிடித்து விட்டது" புராதன இயல்புகளில் இது பலமாக வேரூன்றியிருக்கிறது. சுற்றிலும் மோதிச் சாடுகிற பலவிதமான மாற்றங்களும் இதன் வேர்களை அசைத்துவிட இயலவில்லை. இருந்தாலும், இந்த ஊர் பழமையிலேயே குறுகிக்கூனி நின்றுவிடவில்லை. காலமாற்றம், நாகரிக வளர்ச்சி ஆகிய வெளிகளிலும் தன் கிளைகளைப் பரப்பிக் கொண்டிருக்கிறது" என்று ஆல்பர்ட் சொன்னான். "நான் ஸ்டடி பண்ணியதில் எனக்குத் தெரியவரும் உண்மைகளில் இதுவும் ஒன்றாகும்" என்று ஒரு சமயம் ஆல்பர்ட் சிவசிதம்பரத்திடம் அறிவித்தான். "சமுதாய இயல், மானிட இயல் பற்றி எல்லாம் பேசுகிறார்களே-கட்டுரைகள் எழுதுகிறார்களே -அவர்கள் ஸ்டடி பண்ணி எழுதுவதற்கு இங்கு சுவாரசியமான விஷயங்கள் நிறைய இருக்கின்றன. உதாரணத்துக்கு ஐயப்பன் கல்ட் (euit) இந்நாட்டு மக்கள் மத்தியிலே வேகமாக வேரூன்றி விட்டதைக் குறிப்பிடலாம். இந்தப் பிரதேசத்தின் ஒரிஜினல் கடவுள் சிவன் என்கிறார்கள். சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை; சுப்பிரமணியருக்கு மிஞ்சிய கடவுளும் இல்லை என்றும் சொன்னார்கள். அப்படியிருந்தும்கூட, ஐயப்பன் ரொம்பவும் செல்வாக்குப் பெற்று விட்டான் இங்கே. பார்க்கப் போனால், 1930களுக்குப் பிறகுதான் இந்தச் சாமிபக்தி இங்கு தலையெடுத்துள்ளது. மலையாள நாட்டிலிருந்து வந்து, விளம்பர பலத்தினால் எங்கும் பரவிய இந்த பக்தி இப்போது வலிய சக்தியாக விளங்குகிறது. பழைய சாமிகளின் கோயில்கள் கவனிப்பற்றுக் கிடக்கிற பலப்பல ஊர்களிலும் புதிதாகத் தோன்றிய ஐயப்பசாமி கோயில் பிரமாதப்படுகிறது. இதெல்லாம் ஏன்? மக்கள் மத்தியில் ஏற்பட்டு வந்திருக்கிற இந்த மாற்றம் ஸ்டடி பண்ணப்பட வேண்டிய விஷயம் இல்லையா-" ஆல்பர்ட்டின் தயவால் அந்தப் பெரிய வீட்டில் அறிவு ஜீவித்தனம் ஒளிரலாயிற்று. அறிஞர்கள், ஆய்வாளர்கள் அடிக்கடி வந்தார்கள். உலகில் சகல விஷயங்கள் பற்றியும் பேசி விவாதித்தார்கள்.