பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22   ✲   ராதை சிரித்தாள்

வல்லிக்கண்ணன்



மத்தியானச் சாப்பாட்டுக்கு வந்தார் ராதையின் கணவன். அவனை வரவேற்றார். உபசரித்தார். ராதை சிவராமனுக்குக் காட்டிய உபசரணைகளும், அவள் பெற்ற மகிழ்வும், அதிக சிரத்தையோடு அவள் தன்னை அழகு செய்துகொண்டு மினுக்கிய போக்கும் அவர் மனதில் என்னவோ செய்தது. அது மறைந்தது அவன் சிக்கிரமே ஊருக்குப் போக வேண்டும் என்று அவசரப் பட்டபோது.

'நாளைக்கே திரும்பிடலாம்னு நினைக்கிறேன்' என்று சிவராமன் சொன்னபோது ராதை கணவன் முகத்தைப் பார்த்தாள் அவருக்கு மகிழ்வுதான் என்றாலும் உபசாரத்துக்காகச் சொல்லி வைத்தார் 'என்ன தம்பியா பிள்ளே அவ்வளவு அவசரம். இவ்வளவு துரம் வந்ததோ வந்தாச்சு. பொங்கல் கழிச்சுத் தான் போங்களேன். அங்கே என்ன காரியம் கெட்டுப்போகப் போகுதாம் நீங்க இல்லாமே!'

ராதை முகத்தில் மகிழ்வு பொங்கியது. 'ஆமா, ரெண்டு நாள் தங்கியிருந்துவிட்டுத் தான் போகணும். அப்படி என்ன அவசரமாம் வந்தவுடனேயே திரும்பிப் போகணும்னு என்று சொன்னாள்.

சிவராமன் ஒன்றும் பேசவில்லை. நாளைக்கு உறுதியாகச் சொல்லி விட்டு, இஷ்டம்போல் கிளம்பிவிட வேண்டியதுதான் என்று தீர்மானம் செய்துவிட்டான் அவன். அதனால் வீணாக எதற்கு வாக்குவாதம் என்று நினைத்தான்.

ராதையின் கணவன் மறுபடியும் ஆபீசுக்குப் போய் விட்டார். சிவராமன் மத்தியானத்துக்கு மேல் வீட்டில் தங்கியிருப்பானேன், ஊரையாவது சுற்றிப் பார்க்கலாமே என்று நினைத்தான். தனது எண்ணத்தை அவளிடம் அறிவித்தபோது 'அதெல்லாம் இப்ப எதுக்கு வந்த அலுப்போடு? படுத்துக் தூங்குங்க. சாயங்காலம் காபி சாப்பிட்டு விட்டு வெளியே போகலாம்' என்றாள். 'டிபன் என்ன பண்ணலாம்' என்று கேட்டாள்.

'விசேஷமா எனக்குன்னு எதுவும் வேண்டாம். வழக்கம் போல் செய்வதைச் செய்யேன்' என்று 'சுரத்' இல்லாமல் அவன் பேசியது அவளுக்கு ஏமாற்றமே தந்தது.

இருந்தாலும், அவனுக்கு அதிகம் பிடிக்கும் என்று அவள் நினைத்த பலகாரங்களைச் செய்து, காபி போட்டுக் கொண்டு