பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23   ✲   ராதை சிரித்தாள்

வல்லிக்கண்ணன்


வந்து வைத்தாள் ராதை.

'இதெல்லாம் ஏன் வீணாக!' என்று அவன் அலுத்துக் கொண்டது அவளுக்கு சிரிப்பு தந்தது. அவன் காப்பி சாப்பிடும் போது அவள் திடீரென்று கேட்டாள்; 'நாம் சினிமாவுக்குப் போகலாமா' என்று.

'அவாள் இல்லாமே எப்படிப் போறது? வேண்டாம் என்றான்.

'நல்ல படம் ஓடுது இப்போ அவுகளிடம் எத்தனையோ நாளாத்தான் நானும் சொல்லிக்கிட்டிருக்கேன். அவுகளுக்கு சினிமாப் பார்க்க நேரம் ஏது! எப்ப பார்த்தாலும் வேலை, வேலை! நாம சினிமாவுக்குப் போனால், அவுக வறதுக்கு முன்னாலேயே வந்திடலாம்' என்று ஆர்வமாகச் சொன்னாள் அவள்.

அவன், முடியாது. அவாளுக்குத் தெரிஞ்சா கோபப்படுவாக, அதெல்லாம் வேண்டாத வேலை என்று கூறி அவளுக்கு ஏமாற்றமளிக்க நேர்ந்தது.

அவன் ஊரைச் சுற்றிவிட்டு இரவு நேரத்தில் வந்து சேர்ந்தான். அவன் வருவதற்கு முன்பாகவே அவர் வந்திருந்தார். அவர் அன்று சிக்கிரமாகவே திரும்பி விட்டார். அவர் எதிர்பார்த்தததுபோல் இல்லை, அவன் வீட்டில் இராமல் சும்மா சுற்றப் போய் விட்டான் என்று தெரிந்ததும் அவருக்கு சந்தோஷமே பிறந்தது. 'நல்ல மனுஷன்' என்று சொன்னது அவர் மனம்.

இரவில் பத்தரை மணிவரை ஊர்க்கதைகள் பேசிப் பொழுது போக்கி விட்டுத் துரங்கப் போனார்கள் அவர்கள். ராதையும் கணவரும் மாடியறைக்குப் போனார்கள். சிவராமன் கீழே தாழ்வாரத்தில் படுத்துக் கொள்கிறேன் என்று பிடிவாதம் செய்து விட்டான். அது வானவெளியை அடுத்திருப்பதால் காற்றோட்டமிருக்கும், நல்ல தூக்கம் வரும் என்று சொல்லி விட்டான்.

அப்படியே படுத்தும் நன்றாகத் தூங்கத் தொடங்கினான்.

எவ்வளவு நேரமிருக்கும் என்று தெரியாது. திடுக்கிட்டு விழித்தான் சிவராமன். அவன் முதுகில் ஏதோ பூச்சி ஊர்வது போன்ற உணர்ச்சியால் அவன் திடுக்கிட்டான். பக்கத்தில் கரிதாய், நெடியதாய் யாரோ அல்லது எதுவோ ஒன்று நிற்பது போல் தோன்றியது. யாராவது தானா அல்லது பிரமையா என்று தீர்மானிக்க முடியாமல் அவன் திகைத்தான். திடீர் விழிப்பு