பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35   ✲    குமாரி செல்வா

வல்லிக்கண்ணன்


மகளையும் தவிர வேறு யாரையும் காணோமே. முதலில் பிறந்த சந்தேகம் மீண்டும் தலை தூக்கியது அவர் மனதில்.

'உங்கள் ஆபீசுக்கு நானே வரவேணும் என்று எண்ணியிருந்தேன்' என்றாள் குமாரி.

'ஆமாம். இன்று மத்தியானம் போகலாம் என எண்ணினோம். அதற்குள் நீங்களே வந்து விட்டீர்கள்' என்று சொல்லியபடி தோன்றினாள் பெரியவள். கையிலிருந்த கிளாஸை நீட்டி 'இந்தாங்க, காப்பி சாப்பிடுங்க' என்று உபசரித்தாள்.

காப்பியை வாங்கி குடித்து முடித்து விட்டு 'ஏன், என்ன விசேஷம்?' என்று கேட்டார் அவர்.

'உங்களைப் பேட்டி காணத்தான்!' என்றாள் குமாரி.

'பேட்டியா! என்னையா! நீங்களா! அஹஹா!' என்று அவுட்டுச் சிரிப்பு சிதறினார் அவர்.

'ஆமா. இனிமேல் நீங்கள் யாரையும் பேட்டி காணப் போவதில்லை, நட்சத்திரங்கள் வேண்டுமானால் நம்மை வந்து பார்க்கட்டுமே என்று எழுதியிருக்கிறீர்கள் அல்லவா! அதனால்தான்!'

'நீங்கள் நட்சத்திரமா?'

'எதிர்கால நட்சத்திரம்' என்று உறுதியாகச் சொன்னாள் அவள். 'குமாரி செல்வா என் பெயர் நாட்டியம் தெரியும். நடிக்கவும் முடியும். பட முதலாளி தான் எதிர்ப்படவில்லை. நான் இன்றைய நட்சத்திரங்களைப் பற்றி எண்ணுவதை எல்லோரும் அறிய வேண்டும். அதற்கு புதுமையைத் துணிகரமாகக் கையாளும் உங்கள் பத்திரிகை துணை புரியும் என்று நினைத்தேன்' என்றாள் அவள்.

புதுமை மோகமும் துணிச்சலும் எங்கிருந்து எப்படி வேண்டுமாயினும் கிளம்பலாம் என்பதை அறிந்திருந்த ஆசிரியர் பிரமிக்கவில்லை. பாராட்டினார். 'ரொம்ப சந்தோஷம். இப்பவே நீங்கள் சொல்ல வேண்டியதைச் சொல்லி விடுங்கள்! எதிர்பாராத சந்திப்பு புது ரகமான பேட்டியாக மாறி விடட்டுமே!' என்று கனைத்தார் பரமசிவம்.

'செல்வாவுக்கு ஐஸ் க்ரிம்னா உயிர் ரொம்ப அதிகமாத-