பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40   ✲    குமாரி செல்வா

வல்லிக்கண்ணன்



'பின்னே! நாமெல்லாம் நடிக்கத் துணிந்து விட்டால் அப்புறம் படம் படமாகவா இருக்கும்!' என்றேன்.

'பப்படமாத் தானிருக்கும் என்கிறீர்களோ!' என்று கூறிக் கணைத்தாள் அவள். 'சேச்சே, அப்படிச் சொல்வேனா!' என்று குறிப்பிட்டேன்.

இதைத் தொடர்ந்து குமாரியைச் சந்திக்க நேர்ந்த விதம் அவளது குணங்கள், தோற்றம் பற்றி யெல்லாம் எழுதியிருந்தார்.

'குமாரி செல்வா புதுமையிற் புதுமை, தீவிரத்தின் பிம்பம். துணிச்சலின் உயிர்ப்பு. அவளை முதல்முறை காண்கிறவர்கள் என்னடா இவள் இப்படி நடந்து கொள்கிறாளே என்று எண்ணாமலிருக்க முடியாது’ என்று எழுதிப் பேட்டியை முடித்திருந்தார் பரமசிவம்.

பேட்டியைப் பத்தாவது முறையாகப் படித்து முடித்த ஆசிரியர் பரமசிவம் 'முதல் முறை மட்டுமென்ன! மூன்றாவது முறையிலும், முப்பதாவது முறையாகப் பார்க்கும்பொழுதுகூட இப்படித்தான் எண்ண வேண்டியிருக்கும். இந்தப் பெண் என்ன இந்தவிதமாகவெல்லாம் நடந்துகொள்கிறாள் என்றுதான்!' எனத் தானாகவே புலம்பிக் கொண்டார்.

மேலோட்டமான நவயுகக் கல்வியின் கோளாறு புகுத்திய குணக்கேடுதான். நிறைகுடப் பண்பாடு பெறாமல் அரைக்குடத் தன்மையைத்தான் பள்ளிப்படிப்பு பல பேருக்குக் கற்றுக் கொடுக்கிறது. போலித் துணிச்சல், பெண்மைத் துறவு, ஆண்மை வேஷம், அடக்கமின்மை போன்ற பல குணக்குறைவுகள், இவற்றுடன் இளமைத் துடிப்பும் கூடுகிறபோது கூத்தடிப்பையே காணமுடிகிறது. அல்லது இவ்விதமும் கணிக்கலாம். 'அமெரிக்கத்தனம்' என்றுதான். வெகுகாலம் கட்டுண்டு கிடந்த பெண்கள் விடுதலை பெற்று, உரிமை வேட்கையுடன் செயல் புரியத் தொடங்கும்பொழுது உற்சாக மிகுதியிலே பொறுப்பற்ற பிரகிருதிகளாய், கடமை சூழ்நிலை கலாசாரம் முதலியவற்றை மறந்த ஜந்துக்களாக மாறிவிடுகிறார்கள். அவர்கள் நாகரிக உயர்வு எனக் கருதுவது உண்மையில் அடங்காப் பிடாரித்தனமாகவே விளங்குகிறது.இப்படி ஓடியது அவர் சிந்தனை.

அமெரிக்கப் படங்கள், அமெரிக்கப் பத்திரிகைகள்,