பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

55   ✲    குமாரி செல்வா

வல்லிக்கண்ணன்


பிழைப்பில் வந்த வரும்படியைக்கொண்டு இருவரும் வாழ்ந்ததாகச் சிலர் கயிறு திரித்தார்கள். மாஜி 'வால்நட்சத்திரம்' பத்திரிகையின் ஆசிரியரைப்பற்றி அடிபட்ட வதந்திகளுக்குச் சில உதாரணங்கள் இவை.

ஆசிரியர் பரமசிவம் மாறிவிடவில்லை. ஆகவே அவர் வழக்கம்போல் மற்றவர்களின் பேச்சிற்கு மதிப்பு கொடுக்காமல் தன் இஷ்டம்போல் வாழ்ந்தார்.

ஒருநாள் மத்தியானம் அவர் வழக்கம்போல் தானாக எதையோ நினைத்துக் சிரித்துக்கொண்டு ரோடு வழியாக நடந்து கொண்டிருந்தார். திடீரென்று யாரோ அவர்மீது மோதிக் கொண்டதை உணர்ந்ததும் திடுக்கிட்டு நின்றார். மேலே வந்து விழுந்தது யார் என அறிந்ததும் மேலும் திடுக்கிட்டார் அவர்.

'அஹஹஹ்! குமாரி செல்வாதானா! சரித்திரம் திரும்பத் திரும்ப ஒலிக்கும் என்பது சரியாகத்தானிருக்கிறது. என்ன செளக்கியந்தானா? என்று விசாரித்தார்.

பாதி கடித்த மாம்பழத்தைக் கையில் பிடித்தபடி ஓடிவந்து அவர்மீது மோதிவிட்டு விலகி நின்ற குமாரி சிரித்தாள் 'ஓ நீங்கள் தானா! நல்லதாப்போச்சு... நல்லவேளை உங்கமேலே மாம்பழம் பட்டுவிடவில்லை! என்றுசொல்லி, பொங்கி வந்த சிரிப்பை அடக்க முடியாமல் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள் அவள். ஏழு வருஷங்களுக்கு முன்பு ஒருநாள் நிகழ்ந்த 'ஐஸ்க்ரீம்' நிகழ்ச்சி அவள் நினைவிலும் கூத்தாடியது.

ஒருவாறு சிரிப்பை சிரமப்பட்டு ஒடுக்கிவிட்டு 'நீங்கள் மாறவேயில்லை ஸார். அன்று பார்த்தமாதிரியே யிருக்கிறீர்கள்!' என்றாள் குமாரி.

என்றும் ஒரே நிலையாய் 'வதகப்புடலங்காய்' போலவே காட்சியளித்து வரும் தனது திரு உருவைப் பார்த்துக்கொண்ட பரமசிவத்தின் கண்கள் எதிர்நின்ற பாவைமீது ஓடின. அவர் சிரித்தார்.

'ஏன் சிரிக்கிறீர்கள்? என்று கேட்டாள் செல்வா.

'இன்று அளவு டேப் இல்லாமல் போனால்கூட, நூலுக்கும் புட்ரூலுக்கும் வேலை இருக்காது. நிச்சயமாக இல்லை' என்று கூறினார் அவர்.