பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

57   ✲    குமாரி செல்வா

வல்லிக்கண்ணன்


அர்த்தம் பொதிந்திருந்தது.

'தெருவிலே நின்று என்ன நாடகம் இது, செல்வா?' என்று தடுகடுத்தார் உள்ளிருந்து தலைநீட்டிய உத்தமர்.

'வீட்டுக்குள்ளே வாங்க ஸார்' என்று அழைத்தாள் செல்வா. கையிலிருந்த மாம்பழம் முழுவதையும் சாப்பிட்டு, கொட்டையைத் தூர எறிந்துவிட்டு உள்ளே செல்லத் தயாரானாள் அவள்.

'இதைத் தட்டிப்பிடுங்க வந்தார் இவர். நான் ஒட ஆரம்பித்தேன். அவர் துரத்தவும் நான் தெருவுக்கே வந்து விட்டேன்' என்றாள்.

'ரொம்ப சந்தோஷம். நீங்கள் பழைய குமாரி செல்வா ஆகவேதான் இருக்கிறீர்கள் இன்றும். ஆனால் உருவத்தில் மட்டும் கொஞ்சம் மாறுதல்' என்றார் பரமசிவம்.

‘வாழ்விலும் எவ்வளவோ மாறுதல் ஏற்பட்டுவிட்டது ஸார்!'

'இருக்கட்டுமே. நீங்கள் என்றுமே குமாரியாக வாழத் திட்டம் போட்டுவிட்டீர்கள் போலிருக்கு! நான் போய் வருகிறேன்' என்று நகர்ந்தார் அவர்.

'உங்களைப் பார்த்து ரொம்ப ரொம்ப நாளாச்சு இல்லையா ஸார்?' என்று கேட்டாள் குமாரி.

'ஆமாம். ஏழு வருஷங்கள்!' என்று சொல்லிவிட்டு நடந்தார் பரமசிவம்.

'யார் அது?' என்று கேட்ட ஆண் குரலும், 'அவர்தான் வால் நட்சத்திரம்னு ஒரு பேப்பர் நடத்தினாரே, அந்த ஆசிரியர்' என்ற குமாரியின் பதிலும் அவர் காதில் விழுந்தன.

'ஒகோ! அவனா! உருப்படத் தெரியாத பரமசிவமா!' என்று கூறிக் கனைத்தார் புதுப்பேர்வழி. அந்தக் கனைப்பும் ஆசிரியர் காதில் பட்டது.

இந்த மதிப்புரை ஆசிரியருக்கு மிகுந்த மகிழ்வையே தந்தது. 'நம்ம நாடும் மனிதர்களும் கொஞ்சம்கூட மாறாத பண்பினராக வாழ்கிறார்களே! பளா பளா!' என்ற திருப்தியை உண்டாக்கியது தான் காரணம்.