பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

59 ஒரு வீட்டின் கதை வல்லிக்கண்ணன் நெடுக ஒழுக்கு ஏற்படுது. இது பழைய வீடுதான். சுவரிலே எங்கேயாவது ஒரு வெடிப்பு விழுந்திருக்குதா? ஓட்டை ஒழுக்கு என்று பேசப்படுமா? என்று, வாயில்லாத அந்த வீட்டுக்காக வக்காலத்து வாங்கிப் பேசுகிறவர்களுக்கும் குறைவில்லை. நாகரிகமும் கலைகளும் வெகுவேகமாக முன்னேறிவிட்ட -இன்னும் முன்னேறிக் கொண்டிருக்கிற்-இந்நாட்களில், நவீன டிசைன்களிலும், புதுரக அமைப்புகளிலும், 'மாடர்ன்' ஆர்க்கி டெக்கவல் ஃபாஷன்களின்படியும் எப்படி எப்படி எல்லாமோ கட்டிடங்கள் முளைத்துக் கண்களைக் கவர்கின்றன; அல்லது உறுத்துகின்றன. இந்நிலையிலேகூட பழங்கால அமைப்பு முறையின்படி கம்பீரமாக நிற்கும் அந்த 'ஒத்தை வீடு' கண்நிறைந்த காட்சியாய் மனசுக்கு இதம் தரும் தோற்றமாய் மிளிர்கிறது, 'சுற்றுலா' போவதை இனிமையான பொழுது போக்காகக் கொண்டுள்ள சில சுக ஜீவிகள் அந்த வீட்டின் இந்த அம்சத்தைக் குறித்து சில்ாகிப்பது உண்டு. 'ரொம்ப காலத்துக்கு முந்தி' இப்படி ஒரு வீட்டைக் கட்டி, மிடுக்காக வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டு, செயல் புரிந்தவர் உண்மையிலேயே ஒரு பெரிய ஆள் ஆகத்தான் இருக்க வேண்டும் என்று 'ஒத்தை வீட்டைப்' பார்க்கிற சாதாரணர்கள் எண்ணுவது வழக்கம். அக்கம் பக்கத்தில் இல்லாத வகையில் ஒரு பெரிய வீட்டைக்கட்டி 'கிெ ெசெயம்ெெசெயம் என்று போட்டடித்த' பிறவிப் பெருமாள் பிள்ளை, அவர் காலத்தில், அந்த வட்டாரத்தில் ஒரு பெரிய ஆள் ஆகத்தான் விளங்கினார். 'நாடாறு மாதம் காடாறு மாதம்' என்று வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டதாகப் புகழப்படுகிற விக்கிரமாதித்த ராஜன் பாணியைப் பின்பற்ற விரும்பினார் போலும் ஒரு பெரியவர். வட மலையப்ப பிள்ளை எனும் அப்பெரியார் நாடாளும் பொறுப்பை ஏற்றிருந்தாராம் நாயக்க மன்னர் காலத்திலே. அவர் வீட்டுத் திண்ணையிலே திண்டு போட்டுச் சாய்ந்து ஆக்கினைகள் செய்து வைத்தாராம். அந்தத் திண்டு கிழக்குத் திக்கைப் பார்த்தபடி கிடக்கும் ஒரு ஆறுமாத காலம். அடுத்த ஆறுமாதங்கள் மேற்கு நோக்கித் திரும்பியிருக்கும். அதன் பிறகு ஆறு மாத காலம் தெற்குநோக்கி மாற்றப்படும். அப்புறம், வடக்குத் திசையைப்