பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

65 ஒரு வீட்டின் கதை வல்லிக்கண்ணன் சுருக்காகவே திரும்பியும் வந்தார்கள், சங்கிலியுடன். அதன் பிறகுதான் பிள்ளை மாணிக்கத்தை அவிழ்த்துவிடும்படி பணித்தார். "சரி சடி, எழுந்திரி. புத்தியாய் பிழை" என்று சொன்னார் பிள்ளை. அத்துடன் நிற்கவில்லை. வீட்டிலிருந்து தேங்காயெண்ணெய் கொண்டு வரச்செய்து அவன் உடம்பு முழுவதும் தடவிவிடும்படி பணித்தார். திண்ணையில் இலை போடச் சொல்லி, உணவு பரிமாறும்படி கூறி, அருகிலிருந்து கவனித்தார். 'டேய், திருடப்படாது. பொய் சொல்லக் கூடாது. திருட்டும் புரட்டும் குடியைக் கெடுக்கும். வீணாக் கெட்டுப் போகாதே" என்று நல்லுரை கூறி மாணிக்கத்தை அனுப்பிவைத்தார். ஒரு சமயம், ஊருக்குள், நடுத் தெருவில் ஒரு தோட்டத்திலிருந்த பெரிய வைக்கோல் படப்பு ஒன்று தீப்பிடித்து எரிந்தது. கோடை காலம். வாய்க்கால், குளம் எங்கும் தண்ணிர் இல்லாத சந்தர்ப்பம். கொட்டி அணைப்பதற்கு தண்ணிர் கிடைக்கவேயில்லை. அதனால் இரவு முழுவதும் தீ நின்று எரிந்தது. வைக்கோல் போருக்குத் தீ வைத்தது யார் என்று கண்டு பிடிக்க வேண்டிய பொறுப்பு பிறவிப்பெருமாள் பிள்ளைக்கு வந்து சேர்ந்தது. பிள்ளைமார் தெருவில் புகுந்து இப்படி ஒரு அக்கிரமத்தை செய்தவனை சும்மா விடலாமா என்று ஊர்க்காரர்கள் முணமுணத்தார்கள். தேவமார் சிலரைக் கூப்பிட்டு விசாரித்தார் பிள்ளை. அவர்கள் தங்களுக்கு எதுவுமே தெரியாது என்று சாதித்தார்கள். "உங்களுக்கெல்லாம் தெரியாமல் இது நடந்திருக்காது. நீங்கள் சொல்ல விரும்பலே. சரி. இனிமேல் நீங்க என்னைக் குறை கூறப்படாது. என்பேரிலே வருத்தப்படவும் கூடாது" என்று சொல்லிவிட்டு எழுந்தார் பிள்ளை. ஒரு ஆளைக் கூப்பிட்டு, “உள்ளே இருக்கிற மண்எண்ணை டின்னை எடுத்திட்டு வா. தீப்பெட்டியும் எடுத்துக்கோ" என்று உத்திரவிட்டார். பட்டு லேஞ்சியை எடுத்து, கழுத்தைச் சுற்றிப் போட்டுக் கொண்டு, வெள்ளிப் பூண் கட்டிய நீண்ட தடியைக் கையில் ஒரு 5