பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

67 ஒரு வீட்டின் கதை வல்லிக்கண்ணன் "இதை அப்பவே செய்திருக்கலாமில்லே? என்னை வீனா இதுவரை இழுத்தடிச்சு இப்படி எல்லாம் பண்ணும்படி செய்துட்டிகளே?" என்று அலுத்துக் கொண்டு, திரும்பி நடந்தார். "ஐயா இவனை என்ன செய்ய?’' என்று பெரிய தேவர் ஒருவர் கேட்டார். - "சவத்துப்பயலை என்ன செய்வீங்களோ எனக்குத் தெரியாது. எரிஞ்சு போன வைக்கப்படப்பின் கிரயம் எனக்கு வந்தாகணும். அதுக்கு நீங்க என்ன வழி பண்ணுவிகளோ, அதுவும் எனக்குத் தெரியாது. ரெண்டு நாளிலே பணம் வந்து சேரணும். பணம் வரலேன்னோ...இன்னிக்கு என்னகிழமை? திங்களா? சரி. செவ்வாயும் புதனும் போயி, வியாழக்கிழமை அன்னிக்கு உங்க பகுதியிலே உள்ள எல்லாப் படப்புகளிலும் தி கூத்தாடும். ஆமா. சொல்லிப் போட்டேன்" என்று பிறவிப்பெருமாள் உறுதியாக அறிவித்தார். 'வாயடியும் கையடியும்' பெற்ற தனி நபர்கள்-நெஞ்சு தைரியமும் பணபலமும் உடைய அடாவடிக்காரர்கள்-தங்கள் சித்தம்போல் ஊரை அடக்கி ஒடுக்கும் ஆற்றல் பெற்றிருந்த காலம் அது. அத்தகைய தனிநபர் ஒருவர் முன்னே ஊரார்கள் மனித மந்தையாகச் செயலிழந்து நிற்கக் கூடிய காலமாகவும் அது இருந்தது. - எல்லோரும் மவுனமாகத் தலையைத் தொங்கப் போட்டபடி வெளியேறினார்கள். பிள்ளை அவர்கள் கெடு வைத்த தேதியில் பணம் வந்து சேர்ந்தது. அன்றைய நிலவரப்படி, எரிந்த வைக்கோல் போரின் கிரயம் என்ன வருமோ அந்தத் தொகை, தம்பிடி குறையாமல் இருந்தது. - ஊர்க் கோயில் கொடைக்கு வீட்டுக்கு இவ்வளவு ரூபாய் என்று வரி விதித்து வசூலிப்பது போல், பணம் வசூல் செய்து கொண்டு வந்து அவர்கள் பிள்ளையின் முன் வைத்தார்கள். தோள் துண்டை இறக்கி, இடுப்பில் கட்டிக் கொண்டு, பணிவோடு கும்பிட்டு நின்றார்கள். "வெள்ளையன்பயலை என்ன செஞ்சீங்க?" என்று பிள்ளை கேட்டார். "வெறும் கூறு கெட்ட கோப்புரம்! சவத்தை என்ன பண்ண