பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

73 ஒரு வீட்டின் கதை வல்லிக்கண்ணன் அது நொண்டி, குழல்வாய்மொழி அம்மாளுக்குச் சொந்த ஊர் 'திருக்குறுங்குடி', அவள் ரொம்பவும் பருமனாக இருந்தாள். அதிக உயரமும் இல்லை. அவள் ஒரு காலை இழுத்து இழுத்து நடப்பாள். வாதச் சேட்டையினால் கால் பாதிக்கப்பட்டிருந்தது. அவள் காலை இழுத்து அசைத்து ஆடி மெதுவாக வருகிறபோது. ஒரு குட்டி யானை நடப்பது மாதிரி இருக்கிறது என்று பிள்ளை சொல்வது உண்டு. இதனால், நாளடைவில், அவர் பேச்சில் அவளே திருக் குறுங்குடி நொண்டியானை' ஆகியிருந்தாள். "வானம் தோண்டுற பள்ளத்திலே வெண்கலப் பானை தெரியுது. அதைத் தோண்டி எடுக்கப் போறாங்க என்று பெரியம்மாவிடம் சொல்லு. அவள் விழுந்தடிச்சு ஓடி வருவா" என்று பிள்ளை மகனை.அனுப்பினார். அவள் பக்கத்து வீட்டில் வசித்தாள். தன் 'கொழுந்தப் பிள்ளை' புதையல் எடுத்தால், முழுசாகத் தானே அமுக்கிக் கொள்வார்; அது முறையாகாது தங்களுக்கும் புதையலில் பங்கு உண்டு என்று அந்த அம்மாள் கருதினாள். உரிமையோடு அடிக்கடி கூறியும் வந்தாள். தனக்குத் தெரியாமல் அவர் புதையலை எடுத்து மறைத்து வைத்து விடுவார் என்ற நினைப்பில், அவள் கண்காணிக்கும் நோக்கத்துடன் அந்த இடத்தை சுற்றிச் சுற்றி வருவதை நித்திய கடமைகளில் ஒன்றாகக் கொண்டிருந்தாள். பையன் போய்க் கூறியதுதான் தாமதம். அந்த அம்மாள் செய்து கொண்டிருந்த வேலையை அப்படியே போட்டு விட்டு, வேகம் வேகமாக வந்தாள். "நொண்டி யானை வாறதைப் பாறேன்!" என்று பிள்ளை, அருகிலிருந்தவர்களிடம் சொல்லிச் சிரித்தார். "என்ன கொழுந்தப் பிள்ளே பானை தெரிஞ்சுதாமே?" என்று ஆசையோடும் ஆர்வத்தோடும் கேட்டாள் அவள். "அதுதான் மதினி, உங்களை கூட்டியாரச் சொன்னேன். அங்கே தெக்கு மூலையிலே மண்வெட்டி பட்டு டங்-டங்குனு சத்தம் வந்தது. வெண்கலப்பானை விளிம்பு தெரியுதுன்னு ஆளு சொன்னான். உடனே வெயிலுப் பையனை உங்க வீட்டுக்கு அனுப்பி வச்சேன். ரெண்டு பேரு சேர்ந்து சுற்றிலும் வெட்டினாங்க. பானை விளிம்பும் மேல்பாகமும் நல்லாத் தெரியுதேன்னு, அதைப்