பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74 ஒரு வீட்டின் கதை வல்லிக்கண்ணன் புடிச்சு வெளியே தூக்கக் குனிஞ்சாங்க. திடீர்னு பாருங்க, பலமா யாரோ டிடிச்சு வெடுக்குனு இழுக்குற மாதிரித் தோணிச்சாம். அந்த ஆளுக விழத் தெரிஞ்சாங்க. ஒருத்தன் மண்டையிலே ஒருத்தன் மோதிக்கிட்டாங்க. பானை பூமிக்குள்ளேயே மறைஞ்சு போயிட்டுது! என்று கவாரஸ்யமாக அளந்தார் பிள்ளை. "ஆங் அதிசயமால்லா இருக்கு" என வாய்பிளந்தாள் அம்மாள். "யாரு அப்படி இழுத்திருப்பா?" என்று அதிசயத்தாள். "பூதம்தான். வேறே யாரு இழுப்பாங்க? ஒவ்வொரு புதையலையும் ஒரு பூதம் பாதுகாத்துக்கிட்டிருக்கும். புதையல் யாருக்கு கிடைக்கணுமின்னு இருக்குதோ, அவங்க வந்து தோண்டுற போது, அது தானா விட்டுக் கொடுத்திடும். பிறத்தியாரு ஆசைப்படுறபோது, பூதம் புதையலை கொடுக்காது. இப்போவும் அப்படித்தான் நடந்திருக்கு." "பானை தெரிஞ்சுதா? நீங்க கண்ணாலே பார்த்தீங்களா? எவ்வளவு பெரிசு இருக்கும்?" என்று அடக்க முடியாத அவவோடு விசாரித்தாள் அவள். “ரொம்பப் பெரிய பானை. மதினி, உங்க வீட்டு அறவீட்டிலே இருக்கே-நீங்க முறுக்கு சுட்டு அடுக்கி வச்சிருக்கிகளே-அது மாதிரிப் பெரிய வெண்கலப்பானை....முறுக்கெல்லாம் தீர்ந்து போச்சா மதினி? தினம் ராத்திரி ராத்திரி நீங்களும் அண்ணாச்சியும் பானையைப் போட்டு உருட்டி, முறுக்குகளை எடுத்து, அரைச்சு நொறுக்குறது எங்க வீட்டு வரைக்கும் கேட்குதே. சிலசமயம் திடீர்னு நான் முழிச்சுக்கிடுவேனா? அப்போ வெண்கலப் பானையிலே முறுக்குகள் புரளுகிற ஓசை என் காதிலே விழுமா? புதையல் பானையிலே காசுகளும் நகைகளும்தான் உருளு தாக்கும்னு நெனச்சுக்கிட்டு, நான் அங்கேயும் இங்கேயும் தேடி அலைவேன்" என்று பிள்ளை சொன்னார். குழல்வாய்மொழி அம்மாளுக்கு வெட்கம் வந்து கவிழ்ந்தது. அவள் நாணிச் சிரித்து, 'கொழுந்தப்பிள்ளைக்கு என்னை கேலி பண்ணாம இருக்க முடியாது... நான் போகணும். கைச்சோலியை அப்படி அப்படியே போட்டுட்டு வந்தேன்' என்று கூறியபடி நகர்ந்தாள். "பார்த்துப் போங்க மதினி. கல்லும் கட்டியுமாக் கிடக்கு"